டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 400cc பிரிவில் புதிய திரஸ்டன் 400 கஃபே ரேசர் ஸ்டைல் மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது. ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X என இரு மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியில் உருவாக்கப்பட்ட 398.15cc TR சீரிஸ் என்ஜின் பெற உள்ள திரஸ்டன் 400 பைக் அறிமுக அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.
Triumph Thruxton 400
விற்பனையில் உள்ள இரண்டு 400சிசி பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ள அதே என்ஜின், சேஸ், உட்பட சஸ்பென்ஷன் பிரேக்கிங் அமைப்புகளை பகிர்ந்து கொள்ளுகின்ற கஃபே ரேசர் ஸ்டைலை பெற்ற டிரையம்ப் திரஸ்டன் அல்லது திரஸ்டன் 400RS என அழைக்கப்படலாம்.
TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலின் ஃபேரிங் பேனல்கள் பழைமையான குமிழ் வகையில், ஃபேரிங் கொடுக்கப்பட்டு ஹெட்லேம்ப் வடிவமைப்பு ஆனது ஸ்பீடு டிரிபிள் RR பைக்கிற்கு இணையாக அமைந்திருக்கின்றது. மற்றபடி, கிளிப் ஆன் ஹேண்டில் பார் கொண்டு சில ஸ்டைலிங் அம்சங்களை கஃபே ரேசருக்கு இணையாக மேம்படுத்தியுள்ளது.
ரூ.2.33 லட்சத்தில் ஸ்பீடு 400 மற்றும் ரூ.2.63 லட்சத்தில் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் கிடைப்பதனால் சற்று கூடுதலான விலையை புதிய திரஸ்டன் 400 பைக் கொண்டிருக்கலாம். விற்பனைக்கு அனேகமாக அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.
image source: Autostreet.in