Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஜனவரி 14.., சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை வெளியீடு

by automobiletamilan
January 7, 2020
in பைக் செய்திகள்

பஜாஜ் சேத்தக்

ரூ.1.30 லட்சம் ஆன்ரோடு விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற பஜாஜின் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ஜனவரி 14 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முன்பாக சேட்டக் ஸ்கூட்டரின் அனைத்து நுட்ப விபரங்கள் மற்றும் வசதிகளை பஜாஜ் வெளியிட்டிருக்கின்றது.

சேட்டக் மின் ஸ்கூட்டரை 5 மணி நேரத்தில் முழுமையான சார்ஜிங் பெறக்கூடிய லித்தியம் ஐயன் பேட்டரியை கொண்டுள்ள சேட்டக்கில் 80 சதவீத சார்ஜிங்கை 3 மணி நேரம் 50 நிடங்களில் பெற இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பெற்றுள்ள இந்த மாடல் முழுமையான 100 சதவீத சார்ஜ் உள்ள சமயத்தில் ஈக்கோ மோடில் பயணித்தால் 95 கிமீ ரேஞ்சு வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்போர்ட் மோடில் பயணிக்கும் போது அதிகபட்மாக 85 கிமீ ரேஞ்சை வழங்கும். இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆதரவை கொண்ட வட்ட வடிவ TFT டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் சேட்டக் ஆப் வாயிலாக இணைப்பினை ஸ்மார்ட்போன் மூலம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.  இதன் மூலம் அழைப்புகள், எஸ்எம்எஸ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உட்பட அடிப்படையான பேட்டரி ரேஞ்சு, கடிகாரம், சர்வீஸ் இன்டிகேட்டர், ஸ்பீடு போன்றவற்றை அறியலாம்.

சேட்டக் ஆப் வாயிலாக ஓட்டுதலின் திறன்களை கண்காணிக்க இயலும். இதன் மூலம் ரைடிங் தன்மையை மாற்றிக் கொள்வதுடன் ரேஞ்சு விபரங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

ஜனவரி 14 ஆம் தேதி சேடக் ஸ்கூட்டரின் விலை அறிவிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக புனே, பெங்களூரு நகரங்களை தொடர்ந்து டெல்லி உட்பட மேற்கு இந்தியாவில் விரிவுப்படுத்தப்பட்டு படிப்படியாக நாடு முழுவதும் இந்த ஆண்டிற்குள் கிடைக்கலாம்.

 

[youtube https://www.youtube.com/watch?v=jVm6SSYLbLM]

Tags: Bajaj Chetakபஜாஜ் சேட்டக்
Previous Post

ஹூண்டாய், உபேர் கூட்டணியில் பறக்கும் மின்சார டாக்ஸி – CES 2020

Next Post

பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு வெளியானது

Next Post

பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு வெளியானது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version