Automobile Tamilan

பஜாஜ் சேட்டக் 3201 SE ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வெளியானது

Bajaj Chetak 3201 SE

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதல் ரேஞ்ச் வழங்கும் 3201 SE மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் டெக்பேக் அல்லது டெக் பேக் அல்லது ஸ்டாண்டர்ட் மாடல் என இரண்டு விதமாக கிடைக்கின்றது.

Bajaj Chetak 3201 SE

ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற சேட்டக் 2024 பிரீமியம் வேரியண்டின் அடிப்படையில் தான் இந்த மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த 3201 SE ஸ்பெஷல் வேரியண்டில்  ப்ரூக்லின் பிளாக் ஒற்றை நிறத்தில் கிடைக்கின்றது. மற்றபடி பக்கவாட்டில் இந்த மாடலில் Chetak என்ற பேட்ஜ் ஆனது பெரிய எழுத்தில் கொடுக்கப்பட்டு கவர்ச்சிகரமான அம்சமாக பார்க்கப்படுகின்றது.

ஆனால் பிரீமியம் சேட்டக் 2024 மாடலை விட கூடுதலாக 10 கிமீ வரை ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது. 3201 SE ஸ்பெஷல் வேரியண்டில் 3.2kwh பேட்டரி பெற்று மணிக்கு 73 கிமீ வேகதை எட்டுவதுடன் 136 கிமீ ரேஞ்ச் வெளிப்படுகின்றது. சிங்கிள் சார்ஜில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 115 கிமீ வரை வெளிப்படுத்தலாம்.

ஆனால் இந்த மாடலின் சார்ஜிங் நேரம் பிரீமியம் ஸ்கூட்டரை விட ஒரு மணி நேரம் அதிகமாக உள்ளது. ஐந்து மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் பிரீமியம் 2024 மாடல் ஆனது வேறு ஒரு நான்கு மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றது.

 

டெக் பேக் மாடல் மற்றும் டெக் பேக் அல்லது மாடல் என இரண்டும் ஒரே மாதிரியாக மணிக்கு 73 கிலோமீட்டர் வேகத்தை வெளிப்படுத்துகின்றது இதில் டெக் பேக் பெறுகின்ற மார்களில் கூடுதலாக ஸ்போர்ட் ரைடிங் மோடு மற்றும் கூடுதலான கனெக்ட்டிவ் வசதி கிடைக்கின்றது.

பஜாஜ் சேட்டக் 3201 SE சிறப்பு வேரியண்டின் அறிமுகச் சலுகை ரூபாய் 1.30 லட்சத்தில் தொடங்கலாம். இதனுடைய விலை ரூபாய் 1.40 லட்சம் ஆக இருக்கலாம். கூடுதலாக டெக்பேக் கொண்ட மாடலானது ரூபாய் 10 ஆயிரம் வரை கூடுதலாக அமைந்திருக்கும்.
தற்பொழுது பஜாஜ் சேட்டக் ரூ.96,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை நான்கு விதமான வகைகளில் கிடைக்கின்றது.

(கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலையும் எக்ஸ்-ஷோரூம்)

Exit mobile version