பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பட்ஜெட் விலையிலான பிளாட்டினா 100 KS பைக்கின் விலை ரூ.51,667 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற மாடலை விட ரூ.8,000 வரை விலை குறைவாக கிக் ஸ்டார்டர் பைக்கின் விலை அமைந்துள்ளது.

பிளாட்டினா 100 பைக்கின் தோற்ற அமைப்பில் முகப்பு எல்இடி டி.ஆர்.எல் மற்றும் விண்ட்ஸ்கீரின் சிறிய அளவில் மாற்றங்களை பெற்று புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், உடன் கைகளுக்கு பாதுகாப்பான ஹேண்ட் கார்ட்ஸ், அகலமான ரப்பர் ஃபூட் பேட், புதிய வடிவத்திலான இன்டிகேட்டர், மிரர் உட்பட சொகுசான இருக்கை, மிக சிறப்பான சஸ்பென்ஷனை வழங்கும் வாயு நிரப்பட்ட நைட்ராக்ஸ்  ஸ்பிரிங் ஆன் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

102 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டு 7500 ஆர்பிஎம்-மில் 7.9 ஹெச்பி பவரும், 5500 ஆர்பிஎம்-மில் 8.3 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் அல்லது முன்புறத்தில் டிரம் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது.

புதிய பஜாஜ் பிளாட்டினா 100 கேஎஸ் அனைத்து டீலர்ஷிப்களிலும் துவங்கியுள்ள நிலையில் காக்டெய்ல் வைன் ரெட் மற்றும் பிளாக் வித் சில்வர் நிறங்களில் கிடைக்கின்றது.

பஜாஜ் பிளாட்டினா 100 விலை பட்டியல்

PLATINA 100 KS DRUM – ரூ.51,667
PLATINA 100 ES DRUM – ரூ.59,904
PLATINA 100 ES DISC – ரூ.62,125

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் திரு நாராயண் சுந்தரராமன் கூறுகையில், “ பிளாட்டினா பைக் ஒப்பிடமுடியாத தனித்தன்மையை கொண்டுள்ளது. இது, பயணிகள் பிரிவில் சிறந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும். பிளாட்டினா பிராண்டின் 15 ஆண்டுகளில் 72 லட்சத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. புதிய பிளாட்டினா 100 கேஎஸ் இந்த வரிசையில் கூடுதலான ஒன்றாக விளங்கும்.இந்த மாடல் சிறந்த மைலேஜ், சொகுசு தன்மையான மற்றும் அதிக வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு  சிறப்பான அனுபவத்தை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.