இந்திய சந்தையில் பஜாஜ் பல்ஸர் 135 LS பைக் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என உறுதிப்படுத்தப்படும் வகையில் பல்ஸர் 135 பைக் தொடர்நது விற்பனை செய்யப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் பல்ஸர் 135 LS
இந்திய சந்தையில் பிபலமாக விளங்கும் பல்ஸர் வரிசை பைக்குகளில் இடம்பெற்றுள்ள 135 சிசி மாடல் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் நீக்கப்பட்டதாக இந்த பைக் நீக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்ட நிலையில் , தற்போது பஜாஜ் இணையதளத்தில் 135 எல்எஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இந்த மாடல் உற்பத்தி செய்யப்பட்டு ஙரவதாகவும், நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக ஆட்டோகார் இந்தியா வாயிலாக தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் ஏபிஎஸ் பிரேக்கினை 125சிசிக்கு கூடுதலான மாடல்களில் வழங்கவேண்டும் என்ற சட்டத்தை மத்திய அரசு செயற்படுத்தியுள்ள நிலையில், இந்த பைக்கில் ஏபிஎஸ் அறிமுகம் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
பல்ஸர் வரிசையில் இடம்பெற்றிருந்த 135LS பைக்கில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 135சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 11.4 என்எம் டார் வழங்கி வந்தது. 125சிசி சந்தையில் உள்ள மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் நிலைநிறுத்தப்பட்டிக்கின்றது. மேலும் இந்த வரிசையில் பல்ஸர் 150, பல்ஸர் 160, பல்ஸர் 180, பல்ஸர் 200 மற்றும் பல்ஸர் 220 ஆகிய மாடல்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது.
பஜாஜ் பல்ஸர் 135 LS பைக் விலை ரூ. 63,104 (எக்ஸ்-ஷோரூம் சென்னை)