விரைவில், பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகிறது

Bajaj Pulsar Ns125

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபலமான பஜாஜ் பல்சர் பைக் வரிசையில் புதிதாக பல்சர் 125 பைக் (Bajaj Pulsar 125) விற்பனைக்கு வெளியாக உள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட பல்சர் எல்எஸ் 135 பைக் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

125சிசி க்கு கூடுதலான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அல்லது 125சிசி க்கு குறைவான மாடல்களில் சிபிஎஸ் பிரேக் இணைப்பது கட்டாயமாகும். எனவே, ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்படும் போது LS135 விலை அதிகரிக்கும் எனபதனால் இந்த மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கைவிட்டுள்ளது. ஆனால் குறைவான விலை கொண்ட பல்சர் மாடல் சந்தைக்கு தேவை என்பதனால் என்எஸ் 125 பைக்கினை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

பல்சர் 125 பைக் மாடலின் பல்சர் எல்எஸ் 135 தோற்ற அமைப்பினை சார்ந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். சில தோற்ற மாற்றங்களுடன் மேலும் புதிய 125 சிசி பல்சர் வரவிருக்கும் பாரத் ஸ்டேஜ் VI உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 124.45 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 11.8 பிஹெச்பி  6,000 ஆர்பிஎம்மில் மற்றும் 11 என்எம் டார்க்கை வழங்கும் என கருதப்படுகின்றது. இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் வரக்கூடும்.

பிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்படலாம். மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வரவுள்ளது. என்எஸ் 125 ஒரு புதிய ஹெட்லைட் கவுல் பேனலை கொண்டிருப்பதுடன் புதிய என்எஸ் 125 கிராபிக்ஸ், ஸ்பிளிட் இருக்கைகள் மற்றும் கிராப் ரெயில் வழங்கப்பட்டிருக்கும்.

125 சிசி பல்சர் பண்டிகை காலத்திற்கு முன்பாக ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பல்சர் 125 பைக் விலை ரூ. 60,000 (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடல் ஹோண்டா சிபி ஷைன் மற்றும் ஹீரோ கிளாமர் போன்ற முன்னணி மாடல்களுக்கு சவாலாக விளங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *