பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக்குகளில் அடுத்த மாடலாக என்எஸ் 125 விற்பனைக்கு ரூ.93,690 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண பல்சர் 125 மாடலை விட ரூ.20,000 வரை விலை கூடுதலாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
மிக ஸ்டைலிஷனான என்எஸ் 200, என்எஸ்160 பைக்குகளின் வடிவத்தை பின்பற்றி மூன்றாவது மாடலாக வெளியிடப்பட்டுள்ள என்எஸ் 125 பைக்கில் 124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 11.64 ஹெச்பி 8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 என்எம் டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இணைக்கப்பட்டு, 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 130 மிமீ டிரம் பிக்குடன் சிபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்பிளிட் சீட், பெல்லி பேன், ஸ்டைலிங் பாடி கிராபிக்ஸ், பெட்ரோல் டேங்கில் ஷோர்ட்ஸ் போன்றவை கூடுதலாக பெற்றுள்ளது.
144 கிலோ எடை கொண்ட பல்சர் என்எஸ் 125 பைக்கில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு சிவப்பு, நீலம், ஆரஞ்சு மற்றும் கிரே என நான்கு விதமான வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கிடைக்கின்ற ஹோண்டா எஸ்பி 125, கிளாமர் 125 என இரு மாடல்களுக்கு நேரடியான சவாலினை ஏற்படுத்தி வரும் பல்சர் 125 பைக்கில் கூடுதலாக என்எஸ் 125 வேரியண்ட் வந்துள்ளது.
பல்சர் என்எஸ் 160 மாடலை விட ரூ.16,000 குறைவாகவும், பல்சர் 125 மாடலை விட ரூ.20,000 விலை கூடுதலாகவும் அமைந்துள்ளது.
பஜாஜ் பல்சர் NS125 விலை ரூ.93,690 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)