புதிய நிறங்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக் விற்பனைக்கு அறிமுகம்

7555b 2021 bajaj pulsar rs 200

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிரசத்தி பெற்ற பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் மூன்று புதிய நிறங்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ரூ.1,52,371 (விற்பனையக விலை சென்னை) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட சிவப்பு, மற்ற இரண்டு வண்ணங்களும் பளபளப்பான வெள்ளை மற்றும் கிரே நிறத்தை கொண்டுள்ளது. குறிப்பாக சேஸ் மற்றும் அலாய் வீல் வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளது. பாடி கிராபிக்ஸ், கார்பன் ஃபைபர் டெஸ்டரிங் ஃபென்டரில் இணைக்கப்பட்டு இருக்கை முறை ஹாட் ஸ்டேம்பிக் பேட்டரன் முறையில் வழங்கப்பட்டுள்ளது.

வண்ணங்களை தவிர மற்றபடி வசதிகள் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. ஃபேரிங் ரக பல்சர் ஆர்எஸ் 200 மாடலில் இடம்பெற்றுள்ள 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 24.5 PS பவர் மற்றும் 18.5 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டு, முன் சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது. 17 அங்குல அலாய் வீல் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

41091 bajaj pulsar rs 200 pewter grey

பல்சர் ஆர்எஸ் 200 மாடல் மட்டுமல்லாமல் பல்சர் என்எஸ் 200 மற்றும் என்எஸ் 160 பைக்கிலும் புதிய நிறங்கள் இணைக்கப்பட்டுள்ளது. வரும் 23 ஆம் தேதி முதல் டீலர்களிடம் கிடைக்க துவங்கும்.

Web Title : Bajaj Pulsar RS 200 gets new colour options

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *