டூ வீலர்களின் டெஸ்லா நிறுவனமாக மாற விரும்பும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் மாடலை அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.
பஜாஜ் அர்பனைட்
நேற்று நடைபெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முக்கியமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் , பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களை 70 நாடுகளில் விற்பனை செய்வதனை குறித்து வெளியிட்டிருந்த நிகழ்வில் புதிய கோஷ்த்தை உருவாக்கியுள்ளது.
உலகின் விருப்பமான இந்தியன் (The World’s Favourite Indian) என்ற டேக்லைனை உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் பஜாஜ் எலக்ட்ரிக் பைக் பற்றி கூறுகையில் பஜாஜ் அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர்
எலக்ட்ரிக் மாடல்களுக்கு என பிரத்தியேகமான பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டர் என்ற பிராண்டை உருவாக்குவதற்கான முயற்சியில் பஜாஜ் ஈடுபட்டு வருகின்றது. இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிள்களை இந்நிறுவனம் உருவாக்க உள்ளது.
ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிள் என எந்த பிரிவில் முதல் மாடலை அர்பனைட் வெளிப்படுத்தும் என உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. இந்த மாடலின் பவர்ட்ரெயின் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.
அடுத்த சில மாதங்களுக்குள் பஜாஜ் அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான முக்கிய விபரங்களை இந்நிறுவனம் வெளிப்படுத்த உள்ளது.