Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

அர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ

by automobiletamilan
October 10, 2019
in பைக் செய்திகள்

The World’s Favourite Indian

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் (Chetak Chic Electric) என்ற பெயரில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. மேலும்,எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு என பிரத்தியேகமான அர்பனைட் பிராண்டை இந்நிறுவனம் உருவாக்க உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏத்தர், ஒகினாவா மற்றும் 22 கிம்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் நிதி அயோக் தலைவர் அமிதாப் கன்ட் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட உள்ள இந்த மாடலுக்கு ‘Hamara Kal’ என்ற டீசரை இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதில் ‘Hamara Kal’ என்றால் தமிழில் எங்கள் எதிர்காலம் என குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக இந்த ஸ்கூட்டர் சென்னை மற்றும் பெங்களூருவில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்ற ஏத்தர் 450 , ஒகினாவா பிரைஸ் ப்ரோ மாடலுக்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தலாம்.

இந்த மாடலின் நுட்ப விவரக்குறிப்புகள் தற்பொழுது வரை வெளியாகவில்லை. இருந்தபோதும் சில சோதனை ஓட்ட படங்களின் மூலம் கிடைத்த தகவலின் படி,

ரெட்ரோ டிசைன் பாரம்பரியத்தை பெற்று நேர்த்தியான தோற்றத்துடன், நவீனத்துவமான டிஜிட்டல் சார்ந்த வசதிகளை பெற்ற பேட்டரி ஸ்கூட்டர் மாடலாக சேட்டக் விளங்குவதுடன் 12 அங்குல வீல் பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் ஆப்ஷனை கொண்டதாக விளங்கும் என தெரிய வந்துள்ளது.

வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், அப்ரானில் அமைந்துள்ள டர்ன் இன்டிகேட்டர், ஸ்டெப்டு இருக்கை கொண்டதாகவும் விளங்க உள்ள இந்த ஸ்கூட்டர் தயாரிப்பில் பாஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றுகின்றது.

மேலும் இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் மாடலாகவும் வெளியாகலாம் என சில உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றது. பஜாஜின் அர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்  ரூ.1 லட்சம் ஆன்ரோடு விலைக்குள் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

அர்பனைட் ஸ்கூட்டர்

பஜாஜின் நோக்கம், கார் சந்தையில் பிரபலமாக விளங்கும் டெஸ்லா எலக்ட்ரிக் காரை போன்றே இரு சக்கர வாகன சந்தையின் டெஸ்லாவாக விளங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக ராஜீவ் பஜாஜ் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

image – powerdrift, rushlane

Tags: Bajaj Chetak Chic ElectricBajaj urbaniteபஜாஜ் அர்பனைட்பஜாஜ் சேட்டக் சிக் எலெக்ட்ரிக்
Previous Post

90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி

Next Post

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது

Next Post

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version