பல மாதங்கள் காத்திருப்புக்கு பின்னர் பெனெல்லி 302R பைக் ஜூலை 25ந் தேதிவிற்பனைக்கு வரவுள்ளதை  டிஎஸ்கே பெனெல்லி அதிகார்வப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மிக சிறப்பபான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கடியதாக 302ஆர் விளங்கும்.

பெனெல்லி 302R பைக் வருகை

இந்நிறுவனத்தின் டிஎன்டி 300 நேக்டு பைக்கினை அடிப்படையாக கொண்ட முழுதும் அலங்கரிகப்பட்ட மாடலான 302ஆர் பைக்கில் 38 ஹார்ஸ் பவர் , 27 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் லிக்யூடு-கூல்டு 300சிசி பேரலல் ட்வீன் என்ஜின் பொருத்தப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் வழியாக சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்கின்றது.

மிக நேர்த்தியாக இரு பிரிவு முகப்பு விளக்குகள் கொண்டு ஃபேரிங் செய்யப்பட்டுள்ள  302 ஆர் பைக்கின் எடை 196 kg ஆகும். இந்த பைக்கின் முன்புற டயரில் இரண்டு டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் ஒரு டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்றுள்ளது.

சிறப்பான பயண அனுபவத்தினை வழங்கும் வகையில் முன்பக்கத்தில் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் மற்றும் ஏபிஎஸ் பிரேக் நிரந்தரமாக இருக்கும்.

டொர்னேடோ 302 ஆர் பைக்கின் போட்டியாளர்கள் கவாஸாகி நின்ஜா 300 , கேடிஎம் ஆர்சி 390 , யமஹா ஆர்3 மற்றும் வரவுள்ள புதிய டிவிஎஸ் அகுலா 310 போன்ற மாடல்களுக்கு சவாலாக அமையும்.

பெனெல்லி 302R பைக்கின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.3.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)