ரூ.18.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ R18 க்ரூஸர் மாடலில் வந்துள்ள மற்றொரு ஃபர்ஸ்ட் எடிஷன் மாடல் விலை ரூ.21.90 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

1935 ஆம் ஆண்டில் விற்பனை அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ ஆர்5 க்ரூஸர் ஸ்டைல் மாடலை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புத்தம் புதிய க்ரூஸர் ஸ்டைல் ஃபர்ஸ்ட் எடிஷன் மற்றும் ஸ்டாண்டர்டு என இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது. ஸ்டாண்டர்டு மாடலை விட கூடுதலாக க்ரோம் பாகங்களை பெற்றதாக ஃபர்ஸ்ட் எடிஷன் அமைந்துள்ளது.

91 ஹெச்பி பவரை 4750 ஆர்பிஎம்-லும், வெறும் 4000 ஆர்பிஎம்-ல் 150 என்எம் டார்க்கினை வழங்குகின்ற 1802 சிசி, ஏர் ஆயில் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றிருப்பதுடன், இலகுவாக பார்க்கிங் செய்ய ரிவர்ஸ் கியர் இடம்பெற்றுள்ளது. மேலும், பெல்ட் டிரைவ் அல்லது செயின் டிரைவ் பெறாமல் ஷாஃப்ட் டிரைவ் பெற்றிருக்கின்றது.

345 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ ஆர்18 மாடலில் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.7 விநாடிகளை எடுத்துக் கொள்ளும். அதே நேரத்தில் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்த்தில் பயணிக்கும் திறனுடன் வரையறுக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 49 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று 120 மிமீ வரை பயணிக்கும் திறனை கொண்டுள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கேன்டிலிவர் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் மிக சிறப்பான முறையில் சாலைக்கு ஏற்ப செயல்படும் வகையில் அமைந்துள்ளது. அடுத்தப்படியாக பிரேக்கிங் திறனை பொறுத்தவரை முன்புறத்தில் டூயல் டிஸ்க் பெற்ற 300 மிமீ வழங்கப்பட்டு பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் உடன் கூடுதலாக பிஎம்டபிள்யூ இன்ட்கிரேல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ R18 விலை ரூ.18.90 லட்சம்

பிஎம்டபிள்யூ R18 ஃபர்ஸ்ட் எடிஷன் விலை ரூ. 21.90 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)