பிஎஸ்-6 பஜாஜ் பல்சர் 125 ஸ்ப்ளிட் சிட் விற்பனைக்கு வெளியானது

076f5 pulsar 125 bs6

பிஎஸ்-6 பஜாஜ் பல்சர் 125சிசி பைக்கின் நியான் வெர்ஷன் விற்பனைக்கு கிடைத்து வரும் நிலையில் ஸ்பிளிட் சீட் பெற்ற பிரீமியம் வேரியண்ட் இப்போது நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.

124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் எலெக்ட்ரானிக் கார்புரேட்டர் 8,500 ஆர்பிஎம்மில் 11.64 ஹெச்பி  8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 என்எம் டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது. பிஎஸ்4 மாடலுடன் ஒப்பீடுகையில் 0.2 ஹெச்பி வரை பவர் சரிவடைந்துள்ள நிலையில் டார்க்கில் எந்த மாற்றங்களும் இல்லை.

பிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்படலாம். மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வந்துள்ளது.

125சிசி நியான் எடிஷன் மாடலை விட பீரிமியம் விலையில் அமைந்துள்ள இந்த பைக்கில் ஸ்பிளிட் சீட், பெல்லி பேன், ஸ்டைலிங் பாடி கிராபிக்ஸ், பெட்ரோல் டேங்கில் ஷோர்ட்ஸ் போன்றவை கூடுதலாக பெற்றுள்ளது.

பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125சிசி பைக்கின் விலை ரூபாய் 73 939 (டிரம் பிரேக்) மற்றும் டிஸ்க் பிரேக் பெற்ற பல்சர் 125 ரூபாய்  78,438 (டிஸ்க் பிரேக்).

(எக்ஸ்ஷோரூம் சென்னை)

ஸ்பிளிட் சீட் பெற்ற மாடல் ரூ.4,000 வரை சாதாரன டிஸ்க் பிரேக் மாடலை விட ரூ.4,000 வரை கூடுதலாக அமைந்திருக்கும். மேலும் தற்போது புனே எக்ஸ்ஷோரூம் விலை ரூ.79,079 ஆக உள்ளது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தற்போது விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. தமிழத்தில் அடுத்த சில வாரங்களில் கிடைக்கலாம்.

image source – youtube/patna bikes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *