Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.7.99 லட்சத்தில் 2020 கவாஸாகி Z900 விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
September 9, 2020
in பைக் செய்திகள்

Bs 6 Kawasaki Z900

பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற 2020 கவாஸாகி Z900 பைக்கில் பல்வேறு புதிய வசதிகள் இணைக்கப்பட்டு பவர் மற்றும் டார்க் இழப்பில்லாமல் விற்பனைக்கு ரூ.7.99 லட்சம் (விற்பனையகம்) விலையில் வந்துள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை விட ரூ.30,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்பே கவாஸாகி நிறுவனம் பிஎஸ்-6 இசட்900 பைக்கின் விலையை ரூ.8.50 லட்சத்திற்க்குள் அமைந்திருக்கும் என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது ரூ.7.99 லட்சத்தில் அமைந்துள்ளது.

இசட்900 பைக்கில் உள்ள 948 cc இன் லைன் நான்கு சிலிண்டர் இன்ஜின் பிஎஸ்-6 முறைக்கு மாற்றப்பட்டு இப்போது 9500 rpm-ல் 123 பிஹெச்பி பவர் மற்றும் 7700 rpm-ல் 98.6 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. 6 வேக கியர்பாக்ஸ் பெற்று கூடுதலாக சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.

இந்த பைக்கின் முன்புறத்தில் 41 mm அப் சைடு டவுன் ஃபோர்க் ஆப்ஷனும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது.  முன்பக்க டயரில் 300 mm டூயல் டிஸ்க் பரேக் வசதியுடன் பின்புறத்தில் 250 mm ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பின்புற டயரில் பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட புதிய எல்இடி ஹெட்லேம்ப், டேங்க் எக்ஸ்டென்ஷன் போன்றவை புதுப்பிக்கப்பட்டு, எல்இடி டெயில் லைட்டில் எந்த மாறமும் இல்லை. அடுத்தப்படியாக, புதிய கவாஸாகி Z900 பைக்கில் ஸ்போர்ட்ஸ், ரோடு, ரெயின் மற்றும் ரைடர் என நான்கு விதமான ரைடிங் மோடுகளும், எலக்ட்ரானிக் அம்சத்துடன் இணைக்கப்பட்ட Kawasaki Traction Control (KTRC) போன்றவற்றை பெற்றுள்ளது.

Tags: Kawasaki Z900
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version