பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினை பெற்ற கேடிஎம் ஆர்சி 125, ஆர்சி 200 மற்றும் கேடிஎம் ஆர்சி 390 போன்ற மாடல்களுடன் 125 டியூக், 200 டியூக் மாடல்களையும் மேம்படுத்தியுள்ளது.
விலையை பொறுத்தவரை, ஆர்சி 125 ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 ஆகியவற்றின் விலை இப்போது முறையே ரூ.1.55 லட்சம், ரூ.1.97 லட்சம் மற்றும் ரூ. 2.48 லட்சம். இது அவற்றுடன் தொடர்புடைய பிஎஸ் 4 மாடல்களை விட ரூ .4,000 முதல் ரூ. 6500 வரை உயர்ந்துள்ளது.
RC125 மாடலில் 124.5 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் 9,250 ஆர்.பி.எம்-ல் 14.5 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் 12 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.
RC200 பைக்கில் 199.5 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 10,000 ஆர்.பி.எம்-ல் 25 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் மணிக்கு 19.2 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.
RC390 ஃபேரிங் பைக்கில் 373.3 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 9,000 ஆர்.பி.எம்-ல் 43.5 ஹெச்பி பவர் மற்றும் 7,000 ஆர்.பி.எம்-ல் 36 என்எம் டார்க்கை உருவாக்குகிறது.
தற்போது மூன்று மாடல்களிலும் புதிய பாடி கிராபிக்ஸ், புதிய நிறங்கள் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் அனைத்து மாடலிலும் உள்ளது.
கேடிஎம் RC 125 ரூ. 1,55,277
கேடிஎம் RC 200 ரூ. 1,96,768
கேடிஎம் RC 390 ரூ. 2,48,075
(எக்ஸ்ஷோரூம்)