யமஹா FZS 25

கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்6 யமஹா எஃப்இசட் 25, மற்றும்  எஃப்இசட்எஸ் 25 என இரு மாடல்களையும் தற்போது விற்பனைக்கு யமஹா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எஃப்இசட் 25 பைக்கின் தோற்ற அமைப்பில் எந்த மாறுதல்களும் பெறாமல் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய FZS 25 , FZ25 என இரு பைக்கிலும் புளூ கோர் என்ஜின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20.1 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

யமஹா எஃப்இசட்எஸ்25 பைக்கில் புதிய வைசர் பெற்ற ஹெட்லைட், நெக்கல் கார்டுஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. புதிய நிறத்துடன் கூடுதலாக கோல்டன் நிற ரிம் பெற்றுள்ளது.

யமஹா FZ 25

இரு பைக்குகளில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. தற்போது கூடுதலாக டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. எஃப்இசட் 25 பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவுகொண்ட எரிபொருள் கலன் மற்றும் 160 மீமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றதாக உள்ளது.

பிஎஸ்6 யமஹா எஃப்இசட் 25 விலை ரூ.1.52 லட்சம்

யமஹா எஃப்இசட்எஸ் 25 விலை ரூ.1.57 லட்சம்

போட்டியாளர்களான சுசுகி ஜிக்ஸர் 250, கேடிஎம் டியூக் 250, ஹஸ்குவர்னா விட்பிலன் மற்றும் ஸ்வார்ட்பிலன் 250 மற்றும் பஜாஜ் டோமினார் 250 போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.