Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹார்லி-டேவிட்சன் X440 ரோட்ஸ்டெர் பைக் அறிமுகம்

by automobiletamilan
May 25, 2023
in பைக் செய்திகள்
2
SHARES
0
VIEWS
ShareRetweet

Harley-Davidson X440

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் தயாரிப்பில் வந்துள்ள X440 ரோட்ஸ்டெர் பைக் என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களை கொண்டதாக 440cc  ஆயில் கூல்டு என்ஜின் கொண்டுள்ளது.

மிக நேர்த்தியான ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்றதாக விளங்குகின்ற எக்ஸ்440 பைக்கில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

Harley-Davidson X440

வட்ட வடிவத்திலான எல்இடி ஹெட்லைட் பெற்றதாக அமைந்து மிக நேர்த்தியான ரோட்ஸ்டெர் ஸ்டைலிங்கை கொண்டுள்ள ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கில் ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 440cc இடம் பெற்றுள்ளது. ஆனால் என்ஜின் பவர் மற்றும் டார்க் தொடர்பான விபரங்கள் தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.

எக்ஸ்440 பைக் ட்யூப்லெர் ஃபிரேம் கொண்டு முன்புறத்தில் 18 மற்றும் பின்புறத்தில் 17 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டு, யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.இருபக்க டநர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று டூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

Harley-Davidson X440 rear view

Harley-Davidson X440 பைக்கின் விலை ரூ. 2.50 லட்சம் முதல் 3 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) அமையலாம். வரும் ஜூலை 4, 2023 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Harley-Davidson X440 headlight

harley-davidson-x440 harley-davidson-x440-engine

Tags: Harley-Davidson X440
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version