பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிளாமர் பிளேஸ் எடிசன் என்ற பெயரில் மேட் வெர்னியர் கிரே நிறத்தில் மஞ்சள் நிறத்தை பெற்றதாக மிக நேர்த்தியாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
விற்பனையில் உள்ள கிளாமர் 125 பைக்கின் போட்டியாளர்களாக இந்திய சந்தையில் ஹோண்டா எஸ்பி125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 போன்றவை விளங்குகின்றது. தற்போது விற்பனையில் உள்ள மாடலை விட மாறுபட்ட நிறத்தில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் அமைந்துள்ளது. புதிய நிறத்தை தவிர ஹேண்டில் பாரில் மொபைலை சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி போர்ட் இணைக்கப்பட்டுள்ளது.
5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ள கிளாமர் பைக்கில் 125cc மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7,500rpm-ல் 10.73bhp பவரும், 6,000rpm-ல் 10.6Nm டார்க்கையும் வழங்குகின்றது. ஐ3எஸ் நுட்பத்தினை கொண்டுள்ள இந்த மாடல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் எளிதாக சவாரி செய்ய, இப்போது ஆட்டோ சாய்ல் அம்சத்தையும் பெறுகின்றது.
ஹீரோ கிளாமர் பிளேஸ் எடிசன் விலை ரூ. 72,200 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. கிளாமர் டிரம் பிரேக் ரூ.71,000 மற்றும் கிளாமரின டிஸ்க் வேரியண்ட் ரூ.74,500 ஆக விளங்குகின்றது. புதிய நிறத்துடன் அதே நேரத்தில் சிவப்பு, நீலம், கிரே மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.
web title – Hero Glamour Blaze edition Launched – bike news in tamil
For the latest Tamil auto news and Bike reviews, follow automobiletamilan.com on Twitter, Facebook, and subscribe to our YouTube channel.