karizma

பிரசத்தி பெற்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கரீஷ்மா மற்றும் 150சிசி எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் என இரு பைக்குகளை பிஎஸ்6 முறைக்கு மாற்றாமல் கைவிட்டுள்ளது. கரீஷ்மா கடந்த சில வருடங்களாகவே வரவேற்பில்லாமல் இருந்த நிலையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

150சிசி க்கு கூடுதலான சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த குறைந்த விலை எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக் முற்றிலும் சந்தையிலருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 150சிசி பிரிவில் எந்த மோட்டார் சைக்கிள் மாடலையும் ஹீரோ தற்போது விற்பனை செய்யவில்லை. இந்த பிரிவில் சுசூகி ஜிக்ஸர், யமஹா FZS V3 போன்ற மாடல்கள் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. ஆனால் ஹீரோவின் ஸ்போர்ட்ஸ் போதி வரவேற்பின்றி இருந்து வந்தது.

மிகவும் பிரபலமான ஃபேரிங் ஸ்டைல் ஹீரோ கரீஷ்மா மாடலையும் தற்போது இந்நிறுவனம் பாரத் ஸ்டேஜ் 6 முறைக்கு மாற்றமால் கைவிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இணையதள பக்கத்திலிருந்து இந்த மாடல் நீக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விற்பனைக்கு வெளியிட்ட எக்ஸ்ட்ரீம் 200 எஸ், எக்ஸ்ட்ரீம் 200 ஆர் போன்றவை நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக இந்நிறுவனத்தின் அட்வென்ச்சர் எக்ஸ்பல் 200 மற்றும் டூரிங் ரக எக்ஸ்பல்ஸ் 200டி மாடலும் அபரிதமான வரவேற்பினை பெற்று உள்ளது.