சமீபத்தில் விற்பனைக்கு வெளியான புத்தம் புதிய ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவரி வழங்க ஹீரோ நிறுவனம் தயாராகியுள்ளது.
முதன்முறையாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச், DOHC என பல்வேறு பிரீமியம் வசதிகளை கரீஸ்மா பைக்கின் முதன்முறையாக கொடுத்துள்ளது.
Hero Karizma XMR
கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கில் பொருத்தப்பட உள்ள 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
கரீஸ்மா மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டு 17 அங்குல வீல் பொருத்தப்பட்டிக்கின்றது. முழுமையாக ஸ்போர்ட்டிவ் எல்இடி ஹெலைட் பெற்றதாகவும், டெயில் லைட் எல்இடி ஆக அமைந்திருக்கும்.
ரூ.3,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், 2023 ஹீரோ கரீஸமா XMR 210 விலை ரூ.1.73 லட்சம் ஆகும். அடுத்த சில வாரங்களில் விலை ரூ.10,000 வரை உயர்த்தப்பட உள்ளது.