ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை (Vida Electric) என்ற பெயரில் விற்பனைக்கு மார்ச் 2022-ல் வெளியிட உள்ளதாக உறுதி செய்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் அமைந்துள்ள ஹீரோ ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது.
பரவலாக நாடு முழுவதும் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் தங்களுடைய மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் என இரு நிறுவனங்களும் தங்களுடைய மின்சார ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகின்றன.
ஹீரோ மோட்டோகார்ப் பிராண்டில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. எனவே, எந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கும் ‘Hero’ பிராண்டை பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக அவர்களின் வரவிருக்கும் EVகளை அறிமுகப்படுத்த புதிய பெயரை உருவாக்குவது கட்டாயாகிருந்தது. இந்நிறுவனம் சமீபத்தில் ‘விடா எலக்ட்ரிக்’ பிராண்டைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்பின் சார்பாக மேலும் Vida, Vida Mobility, Vida MotoCorp, Vida EV, Vida Electric, Vida Scooters மற்றும் Vida Motorcycles என்ற பெயர்களும் தாக்கல் செய்துள்ளது.
ஹீரோ எலக்ட்ரிக் என்ற பெயரை ஹீரோ மோட்டோகார்ப்பின் சகோதர நிறுவனம் Hero Eco குழுமம் பயன்படுத்தி வருகின்றது.
Vida எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
படத்தில் காண கிடைக்கின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக நேர்த்தியான நவீனத்துவமான டிசைன் அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் 12 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 10 அங்குல வீல் பெற்றதாக அமைந்துள்ளது.
மற்றபடி, தோற்ற அம்சங்களில் பெரிதாக வெளியாகவில்லை. அடுத்தப்படியாக தொழில் நுட்ப சார்ந்த அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு மார்ச் 2022-ல் வெளியிடுவதனை உறுதி செய்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் விபரங்களை எதிர்வரும் நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.