Categories: Bike News

ஜூம் 125 மற்றும் ஜூம் 160 ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்த ஹீரோ

hero xoom 125

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் பிரிமீயம் மேக்சி ஸ்டைல் ஜூம் 160 மற்றும் ஜூம் 125 என இரண்டு ஸ்கூட்டர் மாடல்களையும் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றது.

அதாவது வருகின்ற தீபாவளி பண்டிகை காலத்துக்கு முன்பாக இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் சந்தையில் கிடைக்கும் என்பதனால் விற்பனை எண்ணிக்கை கூடுதலாக பதிவு செய்ய மிக முக்கியமான மாடல்களாக  அமையும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நம்புகின்றது.

குறிப்பாக 125சிசி ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் சந்தையில் உள்ள டிவிஎஸ் என்டார்க் 125, டியோ 125, ரேஇசட் ஆர், அவெனிஸ் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை ஜூம் 125 எதிர்கொள்ள உள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஜூம் 125ஆர் ஸ்கூட்டரில் உள்ள 124.6cc என்ஜின் 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் உடன் 14-இன்ச் அலாய் வீல் பெற்றுள்ளது.

160சிசி சந்தையில் வெளியிடப்பட உள்ள மேக்ஸி ஸ்டைல் ஜூம் 160 இந்திய சந்தையில் கிடைக்கின்ற யமஹா ஏரோக்ஸ், ஏப்ரிலியா SXR160 ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் வரவுள்ளது. இந்த மாடலில் ரிமோட் கீ உடன் லிக்யூடு கூல்டு 156cc, ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14hp மற்றும் 13.7Nm டார்க் வழங்குகின்றது. ஸ்கூட்டர்கள் மட்டுமல்ல பல்வேறு பிரீமியம் பைக்குகளை நடப்பு 2024-2025 ஆம் நிதி ஆண்டுக்குள் வெளியிட உள்ளது.

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஹார்லி-டேவிட்சன் X440, மேவ்ரிக் 440, கரீஸ்மா 210ஆர் உள்ளிட்ட பைக்குகளின் மாதந்திர உற்பத்தி எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்தவும், நாள்தோறும் 1000 எக்ஸ்ட்ரீம் (125cc -200cc) பைக்குகளை தயாரிக்கவும் ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே தனது தயாரிப்பு தொழிற்சாலையை பிரேசில் நாட்டில் துவங்குகின்றது. தற்பொழுது வரை 47க்கு மேற்பட்ட நாடுகளில் தனது இருசக்கர வாகன விற்பனை செய்து வரும் நிலையில் முதல் ஆலை ‘Hero MotoCorp do Brasil Ltd’ என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது.

View Comments

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

16 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

21 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago