Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹீரோ பேஷன் பிளஸ் Vs பேஷன் எக்ஸ்டெக் பைக்கில் சிறந்தது எது ?

by automobiletamilan
June 27, 2023
in Bike Comparison, பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

hero-passion-plus-vs-hero-passion-xtech-bike

பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற ஹீரோ பேஷன் பிளஸ் மற்றும் பேஷன் எக்ஸ்டெக் பைக்குகளில் உள்ள என்ஜின், ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

இரண்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் நிலையில், 2020 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பேஷன் பிளஸ் மீண்டும் அதே ஸ்டைலில் வந்துள்ளது. சமீபத்திய பேஷன் புரோ நீக்கப்பட்டுள்ளது. ஆனால் பேஷன் எக்ஸ்டெக் நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

Table of Contents

  • Hero Passion Plus Vs Hero Passion Xtech
  • சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு
  • பரிமாணங்கள் ஒப்பீடு

Hero Passion Plus Vs Hero Passion Xtech

பழைய வடிவமைப்பினை தக்கவைத்துக் கொண்டுள்ள பேஷன் பிளஸ் பைக் மாடலில் 100சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பினை கொண்ட பேஷன் எக்ஸ்டெக் பைக்கில் 113.2cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

hero passion plus price

hero passion xtech

குறிப்பாக ட்யூப்லெஸ் டயர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர், i3S நுட்பம், சைட் ஸ்டாண்ட் இன்டிகேட்டர் அகலமான இருக்கைகளை பெற்று பேஷன் பிளஸ் சிறப்பாக வந்துள்ளது.

ஸ்போர்ட்டிவான தோற்றத்தை பெற்ற பேஷன் எக்ஸ்டெக் 110 பைக்கில் டிஸ்க் பிரேக், ட்யூப்லெஸ் டயர், i3S நுட்பம், சைட் ஸ்டாண்ட் இன்டிகேட்டர்,  டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி மூலமாக கால், எஸ்எம்எஸ் அலர்ட், எல்இடி ஹெட்லைட், குறைந்த எரிபொருள் இருப்பு எச்சரிக்கை ஆகியவற்றை பெற்றுள்ளது.

பேஷன் பிளஸ் 100 பைக்கில் 97.2cc என்ஜின், அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

113.2cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ள பேஷன் எக்ஸ்டெக் 7,500 rpm-ல் 8.9 bhp மற்றும் 5,500 rpm-ல் 9.79 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 4 வேக கியர்பாக்ஸ்  பெற்றிருந்தது.

SpecsHero Passion PlusHero Passion Xtech
என்ஜின்97.2cc Fi, Air-cooled113.2cc Fi Air Cooled
பவர்7.91 bhp at at 8,000 rpm8.9 bhp at 7500 rpm
டார்க்8.05NM at 6000 rpm9.79NM at 5000 rpm
கியர்பாக்ஸ்4 ஸ்பீடு4 ஸ்பீடு
மைலேஜ்70 Kmpl65 Kmpl
அதிகபட்ச வேகம்90 Kmph90 Kmph

கூடுதல் திறன் மற்றும் பவர் வழங்குகின்ற பேஷன் எக்ஸ்டெக் மாடல் 113.2cc என்ஜின் பெற்றிருக்கின்றது. சற்று குறைவான மைலேஜ் வெளிப்படுத்துகின்றது. மிகவும் பெயர் பெற்ற பேஷன் பிளஸ் பைக்கில் தொடர்ந்து 100cc என்ஜின் பயன்படுத்தப்படுகின்றது.

பேஷன் + பைக்கின் மைலேஜ் சராசரியாக 65-70kmpl வரையும், பேஷன் Xtech மைலேஜ் சராசரியாக 60-65kmpl வரை கிடைக்கின்றது.

passion xtech

சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு

SpecsHero Passion PlusHero Passion Xtech
முன் சஸ்பென்ஷன்டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக்30mm டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக்
பின் சஸ்பென்ஷன்டூயல் ரியர் ஷாக்டூயல் ரியர் ஷாக்
பிரேக்கிங் சிஸ்டம்IBSIBS
முன்பக்க பிரேக்130 mm டிரம்240 mm டிஸ்க்  /130 mm டிரம்
பின்பக்க பிரேக்130 mm டிரம்130 mm டிரம்
வீல் F/R80/100-18 & 80/100-18  ட்யூப்லெஸ்80/100-18 & 80/100-18  ட்யூப்லெஸ்

இரண்டு பைக்குகளும் டிரம் பிரேக் வேரியண்ட்டை பெற்றுள்ள நிலையில் பேஷன் எக்ஸ்டெக் கூடுதலாக டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. சஸ்பென்ஷன், டயர் அளவு என இரண்டிலும் ஒரே மாதியாகவும், இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்ட்டத்தை பெறுகின்றது. பொதுவாக இரு மாடல்களும் ட்யூப்லெஸ் டயர் ஆனது பெற்றுள்ளது.

passion + 100 bike first look

பரிமாணங்கள் ஒப்பீடு

இரண்டு பைக்குகளுமே மிக சிறப்பான பயணத்தை வழங்குவதுடன் அதிகப்படியான சுமை தாங்கும் திறனை கொண்டவை விளங்குகின்றது. குறிப்பாக பேஷன் எக்ஸ்டெக் மாடலை விட பேஷன் பிளஸ் சற்று அதிகப்படியான ஊரகப் பகுதி பயனர்களுக்கு ஏற்றதாக விளங்கும்.

SpecsHero Passion+ 100Hero Passion Xtech 110
எடை115 Kg118 Kg
இருக்கை உயரம்790mm799mm
கிரவுண்ட் கிளியரன்ஸ்168mm180mm
நீளம்1,982mm1,955mm
அகலம்770mm739mm
உயரம்1,087mm1,113mm
வீல் பேஸ்1,235mm1,270mm
சேசிஸ்டியூபுலர் டபுள் கார்டல்டைமன்ட் வகை

பேஸன் பிளஸ் 100 மாடலை விட பேஷன் எக்ஸ்டெக் வீல்பேஸ் 35mm வரை கூடுதலாக அமைந்திருப்பதுடன் இருக்கையின் நீளம் சற்று அதிகமாக உள்ளது. இரு பைக்குகளுமே இருவர் மிக தாராளமாக அமர்ந்து செல்லுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

விலை ஒப்பீடு

100cc என்ஜின் மாடலை விட கூடுதலான வசதிகள் பெற்றுள்ள பேஷன் எக்ஸ்டெக் இளைய தலைமுறையினர் பெரிதும் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக கனெக்ட்டடிவிட்டி வசதி, டிஸ்க் பிரேக், எல்இடி ஹெட்லைட் ஆகியவற்றை பெற்றுள்ளது.

ModelEx-Showroom chennai
Hero Passion+Rs.75,691
Hero Passion XtechRs.78,978 – Rs. 82,678 (Disc)

passion xtrech rear

Hero Passion plus Vs Passion XTech On-road Price in Tamil Nadu

ஹீரோ பேஸன் பிளஸ் மற்றும் எக்ஸ்டெக் பைக்கிற்கு போட்டியாக, ஹோண்டா ஷைன் 100 ஸ்பிளெண்டர் பிளஸ், டிவிஎஸ் ஸ்போர்ட், டிவிஎஸ் ரேடியான், ஹோண்டா CD 110, லிவோ 110, பிளாட்டினா 110 போன்ற மாடல்கள் அமைந்துள்ளன.

ModelOn-road Price in chennai
Hero Passion+Rs.90,570
Hero Passion XtechRs.94,058 – Rs. 98,578 (Disc)

கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகள், எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஸ்க் பிரேக் போன்றவை பேஷன் எக்ஸ்டெக் மாடலை முன்னிலைப்படுத்துகின்றது.

hero motocorp passion plus

ஹீரோ பேஷன் பிளஸ் vs ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பவர் ஒப்பீடு ?

பேஷன் பிளஸ் பைக்கில் 97.2cc என்ஜின், 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் உள்ளது.

பேஷன் எக்ஸ்டெக் பைக்கில் 113.2cc என்ஜின், 8.79 bhp at 7,500 rpm பவர் மற்றும் 9.79 Nm டார்க் உள்ளது.

பேஷன் பிளஸ் அல்லது பேஷன் எக்ஸ்டெக் வாங்கலாமா ?

இரண்டு மாடல்களும் என்ஜின் முதல் பல்வேறு வித்தியாசங்களை கொண்டுள்ளது. பேஷன் எக்ஸ்டெக் இளைய தலைமுறையினருக்கு ஏற்றதாக உள்ளது. பேஷன் பிளஸ் சிறப்பான மைலேஜ் கொண்டதாக உள்ளது.

Tags: Hero Passion PlusHero Passion Xtech
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan