உலகிலேயே அதிகம் விற்பனையாகின்ற பைக் மாடலாக விளங்கும் ஹீரோ ஸ்பிலெண்டர் 25 ஆண்டு காலாமாக இரு சக்கர வாகன சந்தையில் நாயகனாக விளங்குகின்றது.
செல்ஃப் ஸ்டார்ட் வசதியுடன் கூடிய டிரம் பிரேக் பெற்ற அலாய் வீல் மாடலின் அடிப்படையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. சாதாரன மாடலை விட ரூ.1000 வரை விலை அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.
ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்
1994 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்டா கூட்டணியில் விற்பனைக்கு வந்த முதல் ஸ்பிளென்டர் பைக் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற இரு சக்கர வாகனமாக தொடர்ந்து விளங்குகின்றது. ஹோண்டா பிரிந்த பின்னரும் ஹீரோ ஸ்பிளென்டரின் விற்பனை அமோகமாக இருந்து வருகின்றது.
விற்பனையில் உள்ள ஸ்பிலெண்டர்+ i3S மாடலை அடிப்படையாக கொண்டு “Hero Splendor+ 25 Years Special Edition” என்ற பேட்ஜ் பக்கவாட்டில் அமைந்துள்ளது. ஹெட்லைட் மேற்புற பேனலில் “25 Years Special Edition” கொடுக்கப்பட்டுள்ளது. 3டிஅமைப்பில் ஹீரோ பேட்ஜ் மற்றும் ஸ்பிளென்டர் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. புதிதான பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு மற்றபடி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி ஹேண்டில் பாரில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் எடிசன் மாடலில் தோற்ற அமைப்பு மாறுதல்களை 97.2 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் OHC உடன் 8.36 PS பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இன்ட்கிரேட்டெட் பிரேக்கிங் சிஸ்டம் ஆதரவுடன் இரு டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு, ஸ்பெஷல் எடிசன் மாடலில் கருப்பு நிற பூச்சை பெற்ற அலாய் வீல் கொண்டுள்ளது.
சாதாரன மாடலை விட ரூ.1,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ள சிறப்பு எடிஷன் ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ் பைக் விலை ரூ. 55,600 (விற்பனையக விலை) என நிர்ணயம் செய்யப்பட உள்ளது.