ஹீரோ மோட்டோகார்ப்பின், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக்கின் உற்பத்தி நிலை மாடலின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. எனவே, அடுத்த சில நாட்களுக்குள் இரு மாடல்களின் விற்பனை தேதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
ஹீரோ நிறுவனம் பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள் மீதான கவனத்தை சமீபகாலமாக அதிகரிக்க தொங்கியுள்ளது. சமீபத்தில் ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 200ஆர் வெளியானதை தொடர்ந்து அடுத்து எக்ஸ்பல்ஸ் சீரிஸ் வெளியாக உள்ளது.
ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T
சமீபத்தில் மோட்டோபிக்ஸல் டிவி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்ஸ்பல்ஸ் சீரிஸ் மால்களின் உற்பத்தி நிலை படங்கள் நம்பர் பிளேட், ஹைன்ட் கார்டுஸ், கண்ணாடி உட்பட அனைத்து அடிப்படை அம்சங்களை பெற்று முழுமையான உற்பத்தி நிலை மாடலாக காட்சியளிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருந்தது.
எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் இடம்பெற்றிருந்த என்ஜினின் தரம் உயர்த்தப்பட்ட புதிய 200cc ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 18.4 ps பவர் மற்றும் 17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
இந்த பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இதன் மூலம் டேங்கை நிரப்பினால் அதிகபட்சமாக 450 கிமீ வரை பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்புறத்தில் 190 மிமீ பயணிக்கும் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்படுள்ள ஒற்றை ஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ கொண்டிருப்பதுடன் டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைஃ கொண்டதாக இருக்கும் என அறியப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சத்துக்கும் குறைவான விலையில் பல்வேறு அம்சங்களை கொண்டதாக ஹீரோவின் எக்ஸ்பல்ஸ்200 மற்றும் எக்ஸ்பல்ஸ்200டி விளங்கும் என கூறப்படுகின்றது.