ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலுக்கு கொரில்லா 450 (Guerrilla 450) என்ற பெயரை சூட்டியுள்ளது. ஹிமாலயன் 450 என அழைக்கப்பட்ட மாடலில் 450சிசி என்ஜின் ஆனது லிக்யூடு கூல்டு முறையில் கொரில்லா என்ற பெயரில் வரவுள்ளது.
கொரில்லா பைக்கின் பல்வேறு புகைப்படங்கள் முக்கிய விபரங்கள், டிசைன் வடிவமைப்பு என பலவற்றை சோதனை ஓட்ட படங்களில் வெளியாகியிருந்த நிலையில், இறுதியாக விற்பனைக்கு தயாராகியுள்ளது.
Royal Enfield Guerrilla 450
அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ள ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொரில்லா 450 பைக் வெளியிடப்பட உள்ளது.
கொரில்லா 450 பைக்கில் இடம்பெற உள்ள என்ஜின் 35 hp க்கு கூடுதலான பவர் மற்றும் சிறப்பான டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் யூஎஸ்டி ஃபோர்க், எல்இடி விளக்குகள் மற்றும் புத்தம் புதிய ஒற்றை வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.
வட்ட வடிவ TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று டிஜிட்டல் டேகோமீட்டர் அலகினை வெளிப்புற சுற்றளவை கொண்டு கியர்-பொசிஷன் இன்டிகேட்டர் மையத்தில் அமைந்துள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கியர் இண்டிகேட்டரின் வலதுபுறத்திலும் மற்றும் எண்கள் மிகப் பெரிய எழுத்துருவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் மாடலில் 21 இன்ச் பெரிய முன்பக்கம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக ஸ்க்ராம் 450 பைக்கில் 19-இன்ச் முன் சக்கரத்தைப் பெறவதும், பின்புறத்தில் 17-இன்ச் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான நிலைமைகளைச் சமாளிக்கும் அட்வென்ச்சர் மாடல் விரைவில் விற்பனைக்கு வரக்கூடும்.