பிஎஸ்6 என்ஜினை பெற்ற புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் கூலிங் ஃபேன் கவர் மற்றும் ஆயில் இருப்பினை காட்டுகின்ற கேஜில் உள்ள கோளாறினை சரி செய்வதற்காக திரும்ப பெறப்படுகின்றது. இதுவரை 25,000க்கு கூடுதலான பிஎஸ்6 ஆக்டிவா 125 விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்6 என்ஜின் பெற்ற மாடல்களை 2.50 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ள ஹோண்டா நிறுவனம் தனது பிரசத்தி பெற்ற 125சிசி மாடலில் உள்ள கூலிங் ஃபேன் கவர் மற்றும் ஆயில் உள்ள அளவினை காட்டுகின்ற கேஜில் ஏற்பட்டுள்ள கோளாறின் காரணமாக தவறான ஆயில் அளவினை வ்ழங்குகின்றது. எனவே, இது இரண்டையும் இலவசமாக மாற்றித் தர கட்டமில்லாமல் 30 நிமிடத்தில் சர்வீஸ் வழங்கப்பட உள்ளது.
உங்களுடைய இரு சக்கர வாகனமும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய ஹோண்டா இணையதளத்தில் உள்ள சர்வீஸ் பரிவில் பைக்கின் சேஸ் எண் (VIN) கொண்டு அறிந்து கொள்ளலாம்.