இரண்டாவது முறையாக பிரசத்தி பெற்ற ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் விலை ரூ.576 வரை உயர்ந்து இப்போது ரூ.68642 ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ.70,142 ஆக (சென்னை எக்ஸ்ஷோரூம்) நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
110சிசி ஸ்கூட்டர் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள ஆக்டிவா 6ஜி-யில் 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 10 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
முன்பாக ரூ.563 விலை உயர்த்தப்பட்ட்டிருந்த நிலையில் இப்போது ரூ.576 வரை உயர்த்தியுள்ளது. எனவே, பிஎஸ்6 விற்பனைக்கு வந்த பிறகு தற்போது வரை ரூ.1507 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்த மாடலுக்கு நேரடியான போட்டியை டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் ஹீரோ பிளெஷர் பிளஸ் ஏற்படுத்துகின்றது. இந்த பிரிவில் குறைவான விலை கொண்ட மாடலாக பிளெஷர் பிளஸ் விளங்குகின்றது.
இதுதவிர இந்நிறுவனத்தின் ஹோண்டா எஸ்பி 125 மாடல் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தை விட தற்போது வரை ரூ.955 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஹோண்டா எஸ்.பி. 125 பைக் விலை
BS6 Honda SP125 – ரூ.77,179 (டிரம்)
BS6 Honda SP125 – ரூ.81,379 (டிஸ்க்)
(சென்னை எக்ஸ்ஷோரூம்)