இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற 200சிசி பைக்குகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஹோண்டா CBF190R ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
சீனாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிபிஎஃப் 190 எக்ஸ் அட்வென்ச்சர் மாடலின் அடிப்படையிலான சிபிஎஃப் 190 ஆர் பைக்கினை இந்தியாவில் விற்பனைக்கு பதிவு செய்யும் நோக்கில் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஎஃப் 190 ஆர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 184cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 16 ஹெச்பி பவர் மற்றும் 15 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மிகவும் சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ள இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், டைல் லைட் உட்பட மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ளது. அதே நேரத்தில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 உட்பட பல்சர் என்எஸ் 200, அப்பாச்சி 200 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள மிகவும் சவாலான போட்டியாளராக ஹோண்டா CBF190R மற்றும் அட்வென்ச்சர் ஸ்டைல் ஹோண்டா CBF190 X போன்றவை விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.