இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா நிறுவனம் நகர மக்களுக்கு என புதிதாக ஹோண்டா கிராசியா ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
ஹோண்டா கிராசியா ஸ்கூட்டர்
இந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஆக்டிவா மாடல் வாயிலாக முதன்மையான இருசக்கர வாகனம் என்ற பெருமையை பெற்று விளங்கும் ஹோண்டா நிறுவனம் இந்த நிதி ஆண்டில் இரண்டு ஸ்கூட்டர்கள் மற்றும் இரண்டு பைக்குகள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது.
எனவே, முதற்கட்டமாக கிராமப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற ஹோண்டா கிளிக் மற்றும் உள்நாட்டில் பாகங்களை இறக்குமதி செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் ஆப்பிரிக்கா ட்வீன் மாடலை தொடர்ந்து அட்வான்ஸ்ண்டு அர்பன் ஸ்கூட்டர் என்ற கோஷத்துடன் நகர மக்களுக்கு ஏற்ற அம்சங்களை பெற்ற புதிய கிராசியா என்ற பெயரை பெற்ற மாடலை வெளியிட உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் மற்றும் டீலர்கள் வசம் வந்துள்ள புதிய கிராசியா ஸ்கூட்டர் படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. இந்த மாடலில் 109 சிசி எஞ்சினுக்கு மாற்றாக ஆக்டிவா 125சிசி மாடலில் உள்ள 125 சிசி எஞ்சின் பெற்றிருக்கலாம்.
மிகவும் நேரர்த்தியான் வடிவமைப்பை பெற்றுள்ள கிராசியா மாடலின் முகப்பில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் டிஸ்க் பிரேக் உடன் காம்பி பிரேக்கிங் அம்சத்துடன் வரவுள்ளதை உறுதி செயப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 25ந் தேதி முதல் ஹோண்டா கிராஸியா ஸ்கூட்டருக்கு ரூ.2000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். நவம்பர் 10ந் தேதிக்குள் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.
Image Source: Thrustzone