ரூ.1.85 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின், புதிய ஹைனெஸ் சிபி 350 பைக்கின் உற்பத்தி துவங்கப்பட்டு முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள பிக் விங் டீலர்களுக்கு அனுப்ப தொடங்கியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா, ஜாவா 42 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 போன்றவற்றை எதிர்கொள்ளுகின்ற ஹைனெஸ் சிபி350 மாடல் ஹரியானாவில் அமைந்துள்ள ஹோண்டாவின் மானசேர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஹைனெஸ் சிபி 350 விலை மற்றும் இன்ஜின் விபரம்
சிபி 350 பைக்கில் DLX Pro மற்றும் DLX என இரு விதமான வேரியண்ட் அமைந்துள்ளது.
DLX – ரூ. 1.85 லட்சம்
DLX Pro – ரூ. 1.90 லட்சம்
348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் -ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன் அசிஸ்ட் உடன் கூடிய சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஹோண்டா பிங் விங் டீலர்கள் கோவை, நெல்லை மற்றும் ஈரோடு என மூன்று மாநகரங்களில் மட்டுமே உள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் சென்னை உட்பட பல்வேறு முன்னணி நகரங்களில் துவக்கப்பட உள்ளது.
web title : Honda H’Ness CB350 Begins Dispatching Across India