இந்தியாவின் நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் வந்துள்ள கிளாசிக் ஸ்டைல் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்கில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய சிறப்புகளை தொகுத்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் 95 சதவீத சந்தை மற்றும் சர்வதேச அளவில் 50 சதவீத சந்தையை பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கின்ற ஹைனஸ் மாடல் ஜாவா மற்றும் இம்பீரியல் 400 போன்றவற்றையும் எதிர்கொள்ளுகின்றது.

ஹைனெஸ் சிபி 350 டிசைன்

சர்வதேச அளவில் விற்பனை செய்கின்ற ஹோண்டா CB 1100 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஹைனெஸ் சிபி 350 மாடல் ரெட்ரோ ஸ்டைலை கொண்டு வட்ட வடிவத்திலான ஹெட்லைட்டில் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டு நவீனத்துவமான வசதியை பெற்றிருக்கின்றது.

அதே போல டர்ன் இன்டிகேட்டர், டேங்க் டிசைன், வட்ட வடிவத்திலான ரியர் வியூ மிரர் மற்றும் பெரும்பாலான இடங்களில் க்ரோம் பூச்சூகள் ரெட்ரோ ஸ்டைலை நினைவுப்படுத்துகின்றது. தட்டையான ஒற்றை இருக்கை அமைப்பு, வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரெட்ரோ நிறங்கள் என அமைந்திருக்கின்றது.

ஹைனெஸ் சிபி 350 இன்ஜின்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லாங் ஸ்ட்ரோக் (Long Stroke) இன்ஜின் போலவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் -ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.

குறைவான அதிர்வுகளை வழங்கும் வகையிலான இரண்டு பேலன்சர் ஷாஃப்ட் பெற்றுள்ள ஹைனெஸ் சிபி 350 பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன் அசிஸ்ட் உடன் கூடிய சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

ஆஃப் டூப்ளெக்ஸ் ஃபிரேம் கார்டிள் கொண்டு வடிவமைக்கபட்டுள்ள சிபி 350 பைக்கில்  DLX Pro மற்றும்  DLX என இரு விதமான வேரியண்ட் அமைந்துள்ளது. குறிப்பாக பிரீமியம்  DLX Pro வேரியண்டில் டூயல் டோன் மற்றும் ஸ்மார்ட் வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மட்டும் கூடுதலாக அமைந்துள்ளது.

இந்த மாடலின் முன்புற டயரில் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் உட்பட முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

முன்புற டயர் 19 அங்குல வீலுடன் 100/90-19M/C 57H டயர் மற்றும் பின்புறத்தில் 18 அங்குல வீலுடன் 130/70-18M/C 63H டயர்  கொடுக்கப்பட்டு ட்யூப்லெஸ் டயர் இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டாவின் செலக்டபிள் டார்க் கன்ட்ரோல், ஹாசர்ட் ஸ்விட்ச், சைடு ஸ்டாண்டு உள்ள சமயத்தில் இன்ஜின் துவக்கத்தை தடுக்கும் இன்ஹைபிட்டர் வசதி பெற்றுள்ளது.

181 கிலோ எடை கொண்டுள்ள ஹைனெஸ் சிபி 350 பைக்கின் வீல் பேஸ் 1441 மிமீ, இருக்கை உயரம் 800 மிமீ கொண்டு 15 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க் மற்றும் 166 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்

ஹைனெஸ் சிபி 350 பைக்கில் இடம்பெற்றுள்ள பிரத்தியேகமான கிளஸ்ட்டரில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி அழைப்புகள், மியூசிக், நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் டிரிப் மீட்டர், ரியல் டைம் மைலேஜ் அறியும் வசதி, சராசரி மைலேஜ், எரிபொருள் இருப்பினை அறியும் வசதி, கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பேட்டரி வோல்ட் மீட்டர் ஆகியவற்றை கொடுத்துள்ளது.

போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, வரவுள்ள ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350, ஜாவா மற்றும் ஜாவா 42, பெனெல்லி இம்பீரியல் 400 ஆகிய மாடல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 அமைந்துள்ளது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 விலை

அக்டோபர் மத்தியில் விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் தோராயமான ஹைனெஸ் சிபி 350 விலை ரூ.1.85 லட்சம் முதல் ரூ.1.90 லட்சத்திற்குள் (எக்ஸ்ஷோரூம்) அமைந்திருக்கின்றது. தற்போது புக்கிங் துவங்கப்பட்டு ஹோண்டா பிக் விங் டீலர்கள் மற்றும் பிக்விங் இணையதளம் மூலமாக ரூ.5,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 (H’Ness CB 350) விலை எவ்வளவு ?

புதிய ஹைனெஸ் சிபி 350 (H’Ness CB 350) விலை ரூ.1.85 லட்சம் – ரூ.1.90 லட்சம் (விற்பனையக விலை)

ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 (H’Ness CB 350) மைலேஜ் விபரம் ?

350சிசி இன்ஜின் பெற்ற ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 (H’Ness CB 350) மைலேஜ் லிட்டருக்கு 30 கிமீ – 35 கிமீ (எதிர்பார்ப்புகள்)

ஹைனெஸ் CB 350 போட்டியாளர்கள் யார் ?

H’Ness CB 350 இன்ஜின் பவர் மற்றும் டார்க் எவ்வளவு ?

BS-VI 348.36 cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பவர் 20.78 bhp @ 5,500 rpm, டார்க் 30 Nm @ 3,000 rpm, இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

Web Title : Honda H’ness CB350 Top 5 highlights and specs