Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

6 விதமான கஸ்டமைஸ் ஹோண்டா CB350 பைக் ஆக்செரீஸ் அறிமுகம்

by automobiletamilan
March 6, 2023
in பைக் செய்திகள்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் H’ness CB350 மற்றும் CB350 RS பைக்குகளுக்கு 6 விதமான கஸ்டமைஸ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. கஃபே ரேசர் ஸ்டைல் ஆக்செரீஸ் இரண்டு பைக்கிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக்செரீஸ் பேக் ரூ.7,500 முதல் ரூ.22,500 வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இரு பைக்குகளில் பொதுவாக 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 RPM-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்ற இன்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஹைனெஸ் CB350 மாடலில் கஃபே ரேசர், கம்ஃபோர்ட், சோலோ கேரியர் மற்றும் டூரர் என நான்கு விதமான கஸ்டமைஸ் வசதிகளும் CB350 RS பைக்கில் கஃபே ரேசர் மற்றும் எஸ்யூவி கஸ்டம் என இரண்டு மொத்தமாக 6 விதமான கஸ்டமைஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Table of Contents

  • H’ness CB350 Cafe Racer
  • H’ness CB350 Comfort Custom
  • H’ness CB350 Solo Carrier
  • H’ness CB350 Tourer Custom
  • CB350 RS SUV Custom
  • CB350 RS Cafe Racer

H’ness CB350 Cafe Racer

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா கஃபே ரேசர் பைக் மாடலுக்கு மிக நேர்த்தியான ரெட்ரோ ஹெட்லைட் கவுல் மற்றும் டான் ஒற்றை சீட் மற்றும் பாடி கலர் பின் இருக்கை கவுல், ஃபோர்க் உறைகள், சம்ப் கார்டு மற்றும் டேங்க் முழுவதும் கோடுகள் பெற்று மிக நேர்த்தியானதாக அமைந்துள்ளது. CB350 கஃபே ரேசர் கஸ்டம் கிட் விலை ரூ.22,600 ஆகும்.

H’ness CB350 Comfort Custom

H’ness CB350 பைக்கிற்கான கம்ஃபோர்ட் கிட் பெற்ற பைக்கில் தாராளமாக அமர்ந்து செல்லும் வகையில் ரைடர் மற்றும் பில்லியன் இருக்கைகள், பில்லியன் ரைடருக்கு பேக்ரெஸ்ட், சேடில் ஸ்டேக்கள், பெரிய ஃபுட்பெக்குகள், நக்கிள் கார்டு மற்றும் பெரிய விண்ட் ஸ்கீரின் ஆகியவற்றை கொண்டுள்ளது. ரைடர் மற்றும் பில்லியனுக்கு வசதியான சாமான்களை ஏற்றுவதற்கான வசதியுடன் கிட் டூ-அப் டூரிங்கிற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. இதன் கிட் விலை ரூ.16,500 ஆகும்.

H’ness CB350 Solo Carrier

தனியாக பயணிப்பவர்களுக்கு ஏற்ற சிறிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் பில்லியனின் இருக்கைக்கு பதிலாக ஒரு லக்கேஜ் கேரியரை சேர்க்கிறது. பிரதான இருக்கை மிகவும் வசதியான அலகுடன் மாற்றப்பட்டுள்ளது. வீல் ஸ்டிரைப்ஸ், சைட் கவர் அலங்காரம், க்ராஷ் கார்டு மற்றும் ஃப்ரண்ட் ஃபோர்க் பூட்ஸ் ஆகியவை பெற்றுள்ளது. H’ness CB350 ஒற்றை இருக்கையாக உள்ள Solo Carrier Custom விலை ரூ.16,200 ஆகும்.

H’ness CB350 Tourer Custom

சுற்றுலா செல்பவர்களுக்கு ஏற்ற டூரர் கஸ்டம் வேரியண்ட் நக்கிள் கார்டு, பின்புறத்தில் லக்கேஜ் கேரியர் மற்றும் நீண்ட வைசர் போன்ற கூடுதல் அம்சங்களுடன் வருகிறது. முக்கியமாக அகலமாக இருக்கை வசதி உள்ளது, என்ஜின் கிராஷ் கார்டுகள் மற்றும் பரந்த படிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. டூரிங் கிட்டின் விலை ரூ.17,600.

CB350 RS SUV Custom

SUV கஸ்டம் கிட் வேரியண்ட் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பைக்கை மிகவும் கரடுமுரடான தோற்றத்தை மாற்றும். இதன் முன்பக்கத்தில் ஒரு சிறிய வின்ட் வைசர், நக்கிள் கார்டு, பிளாக் அவுட் எக்ஸாஸ்ட் பைப் மற்றும் ட்ராஷ் கார்டு ஆகியவற்றைப் பெறுகிறது. சாமான்களை எடுத்துச் செல்வதற்கு வசதியாக பேனியர் தங்கும் வசதியும் உள்ளது. கஃபே ரேசர் கிட்டின் விலை 7,500 ரூபாய் ஆகும்.

CB350 RS Cafe Racer

கஃபே ரேசர் பைக் மாடலுக்கு மிக நேர்த்தியான ரெட்ரோ ஹெட்லைட் கவுல் மற்றும் டான் ஒற்றை சீட் மற்றும் பாடி கலர் பின் இருக்கை கவுல், ஃபோர்க் உறைகள், சம்ப் கார்டு மற்றும் டேங்க் முழுவதும் கோடுகள் பெற்று மிக நேர்த்தியானதாக அமைந்துள்ளது. CB350 rs கஃபே ரேசர் கஸ்டம் கிட் விலை ரூ.17,500 ஆகும்.

Tags: Honda CB350Honda CB350 RS
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version