இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடுவதனை ஜப்பானில் நடைபெற்ற 2023 ஹோண்டா வர்த்தக கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற ஆக்டிவா ஸ்கூட்டரின் அடிப்படையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கும். மற்றொன்று புதிதாக உருவாக்கப்பட்ட டிசைன் பெற்று பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை பெற்றிருக்கும்.
Honda escooter launch details
இந்தியாவில் கிடைக்கின்ற ஏதெர் 450x, ஹீரோ விடா V1, ஓலா எஸ்1 புரோ, மற்றும் பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும் வகையில் ரேன்ஜ் கொண்டிருப்பதுடன் சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சு அனேகமாக 100-150km/charge ஆக இருக்கலாம். இதில் நீக்க இயலாத வகையிலான பேட்டரி அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். அடுத்து, இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட் உட்பட பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாக விளங்கலாம்.
அடுத்து, பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை பெற உள்ள மாடலில் ரேஞ்சு 80km/charge க்கு குறைவாக இருக்கலாம். இந்த மாடலில் ஸ்வாப்பிங் சிஸ்டத்தை ஒருங்கிணைக்க ஹோண்டா மொபைல் பேட்டரி பேக் e நிறுவனத்தை பயன்படுத்த உள்ளது.
பேட்டரி ஸ்வாப்பிங் கொண்ட ஸ்கூட்டர் மாடல் ஆவணத்தில், “வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பங்களை விரிவுப்படுத்த, மாற்றக்கூடிய பேட்டரிகளைத் மாற்றும் பவர் ஆதாரங்களை ஆராயுங்கள்” என குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 2024-ல் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.