ஒலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 Pro மற்றும் S1 என இரு மாடல்களின் விலை முறையே ரூ.15,000 என உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக FAME-II மானியம் ஜூன் 1 ஆம் தேதி முதல் குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய அரசு FAME-II மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.15,000 ஆக இருந்தது.
Ola S1 Pro Electric scooter
ஓலா S1 3kWh வேரியண்ட் விலை ரூ.15,000 அதிகரித்து இப்பொழுது ₹.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) உள்ளது. S1 Pro வேரியண்டின் விலை இப்போது ரூ.1.40 லட்சம் ஆகும், முந்தைய மாடலை விட இப்பொழுது இந்த இ-ஸ்கூட்டரின் விலை ரூ.15,000 உயர்த்தப்பட்டுள்ளது.
S1 புரோ பேட்டரி ஸ்கூட்டரில் மிகவும் சக்திவாய்ந்த 4 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்ச வேகம் 116Km/h மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 181km ரேஞ்சு வழங்கும் என IDC மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 6.30 மணி நேரம் தேவைப்படும்.
Ola S1 Pro Specs | |
Battery Capacity | 4kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 5.5 kW |
Torque (Nm) | 58 Nm |
Top Speed | 116 km/hr |
Range (km) | 181km (Eco) |
Modes | Eco, Normal, Sports, Hyper |
Acceleration (0-60Km) | 4.5 Secs |
ஓலா S1 புரோ தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,52,599
ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 3kWh, மற்றும் 4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. அதிகபட்ச வேகம் 85Km/hr ஆக உள்ளது. 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும். குறிப்பாக, 2kWh பேட்டரி கொண்ட எஸ்1 ஏர், எஸ்1 வேரியண்டுகள் நீக்கப்பட்டுள்ளன.
Model | Old Price | New Price | Difference |
Ola S1 Air | 99,999 | 1,09,999 | 10,000 |
Ola S1 | 1,14,999 | 1,29,999 | 15,000 |
Ola S1 Pro | 1,24,999 | 1,39,999 | 15,000 |