இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஷைன் 100 பைக்கின் அடிப்படையிலான எலக்ட்ரிக் மாடலுக்கான காப்புரிமை கோரப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதால் ஷைன் எலக்ட்ரிக் மீதான எதிர்பாரப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள ICE ஆக்டிவா அடிப்படையில் ஆக்டிவா e: மாடலை இந்நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், அதிகப்படியான விலை மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் போன்ற காரணங்களால் விற்பனையில் சிரமத்தை எதிர்கொள்ளுகின்றது. கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்ட QC1 மாடலும் விலை ரூ.1.05 லட்சத்தில் கிடைத்தாலும் போட்டியாளர்களை விட குறைந்த ரேஞ்ச் கொண்டிருப்பது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
Honda Shine Electric Bike
குறிப்பாக காப்புரிமை கோரப்பட்டுள்ள படத்தில் மிக தெளிவாக தற்பொழுது கிடைக்கின்ற அடிப்படையான டிசனை தக்கவைத்துக் கொண்டு சிறிய அளவிலான மாற்றங்கள் பேட்டரி உட்பட மோட்டார் பொருத்துவதற்கு ஏற்ற வகையில் சேஸிஸ் மாற்றப்பட்டிருக்கலாம்.
விற்பனையில் உள்ள ஷைன் பைக்கின் எலக்ட்ரிக் மாடல் இரண்டு பேட்டரிகளை கொண்டு பேட்டரி ஸ்வாப் முறையிலான தொழில்நுட்பத்துடன் 100 முதல் 120 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் வெளியிடப்படுக்கூடும்.
ஹோண்டாவின் மொபைல் பவர் பேக் e: மூலம் பேட்டரி ஸ்வாப் நெட்வொர்க்கினை அனுமதிக்கும் வகையில் தயாரிக்கப்படும் என்பதனால் நாடு முழுவதும் ஸ்வாப் மையங்களை நிறுவ ஹோண்டா திட்டமிட்டு வருகின்றது.
மேலும் இந்திய சந்தையில் ஹோண்டாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை 2028ல் துவங்க திட்டமிட்டுள்ளதால், ஷைன் எலக்ட்ரிக் விற்பனைக்கு 2026 இறுதி அல்லது 2027 முதல் கிடைக்கலாம்.