Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

90 லட்சம் ஷைன் பைக்குகளை விற்பனை செய்த ஹோண்டா

by automobiletamilan
December 24, 2020
in பைக் செய்திகள்

Honda Shine BS6 price

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஷைன் பைக்கின் விற்பனை எண்ணிக்கை 90 லட்சத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு 125சிசி சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஷைன் மாடல் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது ஹோண்டா ஷைன் மற்றும் பிரீமியம் ஸ்டைல் எஸ்பி 125 என இரு வேரியண்டுகளாக கிடைத்து வரும் நிலையில் முன்பாக ஷைன் எஸ்பி என்ற பெயரில் எஸ்பி 125 விற்பனை செயப்பட்டது.

2006 ஆம் ஆண்டு பயணத்தை துவங்கிய ஷைன், 54 மாதங்களுக்கு பிறகு அதாவது 2013 ஆம் ஆண்டு 10 லட்சம் இலக்கை கடந்தது. 2014 ஆம் ஆண்டு 30 லட்சம் இலக்கை கடந்த நிலையில், வெற்றிகரமாக 2020-ல் 90 லட்சத்தை எட்டியுள்ளது.

ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஹோண்டா ஷைன் 125 ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் டார்க் 10.9 என்எம் ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா 125 சிசி பைக்குகளுக்கு போட்டியாக ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், கிளாமர் 125, பஜாஜ் பல்சர் 125 ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Tags: Honda CB ShineHonda SP125
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version