ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் டூரர் XL டிரான்ஸ்லப் 750 பைக்கின் விலை ரூ.11 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 100 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
தற்பொழுது முன்பதிவு துவங்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளை மற்றும் மேட் பிளாக் என இரு நிறங்களை கொண்டுள்ளது. வரும் நவம்பர் 2023 முதல் டெலிவரி துவங்க உள்ளது.
Honda XL Transalp 750
எக்ஸ்எல் டிரான்ஸ்லப் 750 பைக்கில் 755cc பேரலல் ட்வின் என்ஜின் 90 bhp பவர் மற்றும் 75 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் டைமண்ட் வகை சட்டத்தில் அமைந்திருக்கின்ற மாடலில் 90/90-21 அங்குல வீல் மற்றும் 150/70-R18 இன்ச் ஸ்போக் வீல் கொண்டுள்ளது.
இது ஷோவா USD ஃபோர்க் மற்றும் ப்ரோ-லிங்க் ரியர் மோனோஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் இரட்டை டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் ஒற்றை டிஸ்க் கொண்டுள்ளது.
டிரான்ஸ்லப் 750 மாடலில் 5-இன்ச் டிஎஃப்டி திரை, முழு எல்இடி விளக்கு, ஸ்மார்ட்போன் இணைப்பு, குரல் உதவி அம்சம், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடு-பை-வயர், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் பல நவீன அம்சங்களை பெற்றுள்ளது.
2023 ஹோண்டா XL டிரான்ஸ்லப் 750 விலை ரூ.10,99,999 (எக்ஸ்-ஷோரூம்)