பஜாஜ் ஆட்டோவின் கேடிஎம் மட்டுமல்லாமல் ஹஸ்குவர்ணா நிறுவனம் தனது குறைந்த விலை ஹஸ்குவர்னா விட்பிலன் 250 மற்றும் ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 250 என இரு மாடல்களை இந்தியா பைக் வீக் 2019 அரங்கில் வெளியிட்டுள்ளது.
ஏறக்குறைய விட்பிலன் 401 மற்றும் ஸ்வார்ட்பிலன் 401 என இரு மாடல்களின் தோற்றத்தை பகிர்ந்து கொண்டுள்ள இரு மாடல்களும் கேடிஎம் 250 டியூக் மாடலின் என்ஜின் உட்பட பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக கஃபே ரேசர் ஸ்டைலை விட்பிலன் 250 மாடலும், ஸ்கிராம்பளர் ஸ்டைலை ஸ்வார்ட்பிலன் 250 பைக் பெறுவதுடன் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ற அம்சங்களை பெறுகின்றது
கேடிஎம் 250 டியூக் மாடலில் உள்ள அதே 248.8 சிசி, திரவ குளிரூட்டும் முறை பெற்ற ஒற்றை சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 31 ஹெச்பி பவர் மற்றும் 24 என்எம் டார்க் வழங்குகின்றது. 153 கிலோ (Kerb) எடையுடன் விளங்கும் பைக்குகளில் உள்ள ஸ்டைலிங் அந்தந்த 401 போன்றே அமைந்துள்ளது. அலாய் வீல்களை பெற்று எம்ஆர்எஃப் டயரை கொண்டதாக விளங்குகின்றது.
ஸ்வார்ட்பிலன் 250 மற்றும் விட்பிலன் 250 ஆகியவை பஜாஜ் சக்கான் ஆலையில் தயாரிக்கப்பட்டு கேடிஎம் ஹஸ்குவர்ணா டீலர்ஷிப் வழியாக விற்பனை செய்யப்படும். அடுத்த ஆண்டின் தொடக்க மாதத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். இந்தியா பைக் வீக் 2019 அரங்கில் கேடிஎம் நிறுவன 390 அட்வென்ச்சர் , 790 அட்வென்ச்சர் போன்ற மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
image source -evo india/twitter