இந்திய சந்தையில் முதன்முறையாக 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலெக்ட்ரிக் பைக் மாடலாக மேட்டர் எனெர்ஜி (Matter Energy) நிறுவனத்தின் Aera அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Aera பைக்கின் உண்மையான ரைட் ரேஞ்சு 125 கிமீ ஆக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏரா (Aera) இ-பைக்கில் Aera 4000, Aera 5000, Aera 5000+ மற்றும் Aera 6000 என மொத்தமாக 4 வேரியண்டுகள் இடம்பெற்றிருக்கின்றது. முதற்கட்டமாக Aera 5000 மற்றும் Aera 5000+ என இரண்டு வேரியண்டுகள் மட்டுமே கிடைக்க உள்ளது. வரவிருக்கும் 6000 வேரியண்டில் 6 kWh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். குறைந்த விலை மாடலாக வரவுள்ள 4000 வேரியண்டில் 4 kWh பேட்டரி இடம்பெற உள்ளது.

Matter Aera electric bike

ஸ்டைலிஷான ஐசி என்ஜின் மாடல்களை போலவே தோற்ற அமைப்பினை கொண்டு ஏரா எலக்ட்ரிக் பைக்கில் லிக்யூடு கூல்டு 5kWh பேட்டரி பொருத்தப்பட்டு 125 கிமீ ரேஞ்சு கொண்டிருக்கிறது. ஏரா ஸ்கூட்டரில் உள்ள மோட்டார் 10 கிலோவாட் பவர் வெளிப்படுத்தும் பேட்டரியின் எடை தோராயமாக 40 கிலோ மற்றும் ஏரா இ-பைக் 180 கிலோ எடையைக் கொண்டுள்ளது. மிக முக்கிய அம்சமாக 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் ஆகும்.

Aera 5000 மாடலில் புளூடூத் இணைப்பு, பார்க் அசிஸ்ட், கீலெஸ் ஆபரேஷன், OTA அப்டேட், முற்போக்கான பிளிங்கர்கள் மற்றும் வரவேற்பு விளக்குகளுடன் 7 இன்ச் டச் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக உள்ள வேரியண்ட் 5000+ மாடலில் கூடுதலாக ஆனது புளூடூத் இணைப்புடன் லைஃப்ஸ்டைல் மற்றும் கேர் பேக்கேஜுடன் வருகிறது.

வீட்டில் உள்ள சாதாரன சார்ஜரில் பைக்கினை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். 0-60 கிமீ வேகத்தை எட்ட வெறும் 6 விநாடிகள் போதுமானதாகும். பேட்டரி பேக் மற்றும் வானத்துக்கு 3 வருட வாரண்டியுடன் வருகின்றது.

Matter Aera price

மேட்டர் Aera 5000 – ₹ 1.44 லட்சம்

மேட்டர் Aera 5000+ – ₹ 1.54 லட்சம்

(ex-showroom India)

தற்போது சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா மற்றும் புனே போன்ற பெருநகரங்களுக்கு நகரங்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.