இந்தியாவின் ஸ்டார்ட் அப் மேட்டர் எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் புதிய எனெர்ஜி (Matter Energy) பைக் மாடல் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், 5.0 kWh லிக்யூடு கூல்டு பேட்டரி, டூயல் சேனல் ஏபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ள மாடலாக விளங்குகிறது.

Matter Energy M1 EV

IP67 தர மதிப்பீடு பெறப்பட்ட திரவ நிலையில் குளிரூட்டப்பட்ட, 5.0 kWh பேட்டரி, வழக்கமான 5A வீட்டு சாக்கெட்டில் செருகப்பட்டாலும் டாப்-அப் செய்ய முடியும். முழுமையான சார்ஜ் மேற்கோள்ள ஏறக்குறைய 5 மணிநேரம் எடுக்கும் என மேட்டர் நிறுவனம் கூறுகிறது.

இந்த மோட்டார் 10.5kW என  மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் பின்புற சக்கரத்தில் அதிகபட்சமாக 520Nm டார்க் கொண்டுள்ளது. இந்த மூன்று விதமான ரைடிங் முறைகள் உள்ளன.

மேட்டர் எலெக்ட்ரிக் பைக் மாடலில் 7.0-இன்ச் டச் தொடுதிரை எல்சிடியுடன் கூடிய அம்சத்துடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அறிவிப்பு எச்சரிக்கைகள் மற்றும் மியூசிக் பிளேபேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்ட சுவிட்ச் கியரில் உள்ள பொத்தான்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பைக்கில் உள்ள மென்பொருள் புதுப்பிக்க சமீபத்திய அம்சங்களைப் பெற OTA (Over The Air) வாயிலாக பெற முடியும்.

நேக்டூ ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக் மாடலை போலவே அமைந்துள்ள மேட்டர் எனெர்ஜி மின்சார பைக்கில் லைட்டிங் முழுவதும் LED மற்றும் பிளவு இருக்கைகள், உயர்த்தப்பட்ட கிளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் பில்லியன் ரைடருக்கு ஸ்பிளிட் கிராப் ரெயில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த பைக்கில் சாம்பல் மற்றும் நியான், நீலம் மற்றும் தங்கம், கருப்பு மற்றும் தங்கம் மற்றும் சிவப்பு/கருப்பு/வெள்ளை என நான்கு வண்ணங்கள் உள்ளன.

மேட்டர் எனெர்ஜி தனது முதல் தயாரிப்பிற்கான முன்பதிவுகள் 2023 முதல் காலாண்டில் துவங்கும் என்று அறிவித்துள்ளது. அப்போதுதான் விலைகளும் அறிவிக்கப்படும். டெலிவரி ஏப்ரல் 2023-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார பைக் மூன்று வகைகளில் வழங்கப்படும் மற்றும் 2023 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகப்படுத்தப்படும்.