இந்தியா யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள FZ-FI மற்றும் FZS-FI என இரு மாடல்களிலும் கூடுதலான வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. முன்பு FZS-FI டார்க் நைட் எடிசன் வேரியண்டில் இணைக்கப்பட்ட “யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ்” ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்ட வசதி இரு பைக்குகளிலும் கிடைக்க துவங்கியுள்ளது.
ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியை தவிர கூடுதலாக சைடு ஸ்டாண்டு உள்ள சமயங்களில் இன்ஜின் கட் ஆஃப் ஆப்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது. கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறுவதற்கு ஆண்டராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்ற Yamaha Motorcycle Connect X செயலியை தரவிறக்க வேண்டும்.
புதிய FZ FI பைக்கில் ரேசிங் ப்ளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். FZS FI மாடல் ஐந்து நிற விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கும். அவை மேட் ரெட் (புதியது), டார்க் மேட் ப்ளூ, மேட் பிளாக், டார்க் நைட் மற்றும் விண்டேஜ் எடிசன் ஆகியவற்றில் கிடைக்க உள்ளது.
149 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2 வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.4 பிஎஸ் பவர் மற்றும் 13.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
யமஹா FZ-FI – ரூ. 1,04,439
யமஹா FZS-FI – ரூ. 1,07,200
யமஹா FZS-FI – ரூ. 1,08,700
யமஹா FZS-FI – ரூ. 1,10,700
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)