யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள MT-15 V2 பைக்கின் குறைந்த விலை வேரியண்டின் அறிமுக விலை ₹ 1,66,439 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆக உள்ளது. இந்த மாடலில் Y-connect வசதி மற்றும் எல்இடி ஃபிளாஷர் மட்டும் நீக்கப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எவ்விதமான மாற்றகளும் இல்லை.

சமீபத்தில் யமஹா MT-15 V2 பைக்கில் டிசிஎஸ் எனப்படுகின்ற டிராகஷன் கண்ட்ரோல் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுது வந்துள்ள குறைந்த விலை வேரியண்ட் மேட் ப்ளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரண்டு நிறத்தில் மட்டும் கிடைக்கும்.

2023 Yamaha MT-15 V2

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ள MT-15 Ver 2.0 பைக்கில் OBD2 மற்றும் E20 ஆதரவுக்கு ஏற்ற 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு VVA என்ஜின் அதிகபட்சமாக 18.1bhp பவரை 10,000 rpm-லும் மற்றும் 7500 rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் அப் சைடு டவுன் (USD) ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பெற்ற எம்டி-15 வி2 மாடலில் 17 அங்குல வீல் சேர்க்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டு முன்புறத்தில் 282 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, முன்புறத்தில் 100/80 மற்றும் பின்புறத்தில் 140/70R டயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்பொழுது ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்ற வேரியண்ட் கனெக்ட்டிவிட்டி வசதிகள் அல்லாத வேரியண்ட் என இரு பிரிவாக கிடைக்கின்றது. மற்றபடி, தோற்ற அமைப்பில் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது.

யமஹா MT-15 V2 பைக்கின் Y-Connect வசதியை பெற்ற வேரியண்ட் அழைப்பு அறிவிப்பு, SMS மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகள், மொபைல் போன் பேட்டரி இருப்பு, கடைசியாக நிறுத்தப்பட்ட இடம் மற்றும் மால் ஃபங்சன் அறிவிப்பு போன்ற கூடுதல் அம்சங்களை பெறலாம்.

10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பெற்று டார்க் மேட் ப்ளூ (புதிய), மெட்டாலிக் பிளாக் (புதிய), சியான் ஸ்ட்ரோம், ஐஸ் ஃப்ளூ-வெர்மில்லியன், ரேசிங் ப்ளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் DLX போன்ற நிறங்களில் கிடைக்க உள்ளது.

2023 யமஹா MT-15 V2 பைக்கின் ஆரம்ப விலை ₹ 1,66,439 மற்றும் Y-Connect பெற்ற வேரியண்டுகள் விலை ₹ 1,70,439 ஆகும். (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)