பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் CT 125X அடிப்படையில் புரூஸர் சிஎன்ஜி பைக்கின் சாலை சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக் மாடலாக விளங்க உள்ளது.
கம்யூட்டர் பைக் பிரிவில் உள்ள மாடல்களில் பஜாஜ் நிறுவனத்தின் சிடி பைக்குகள் சற்று மாறுபட்ட தோற்ற வடிவமைப்பினை கொண்டதாக அமைந்துள்ளது.
Bajaj Bruzer 125 CNG
CT 125X பைக்கில் காணப்படுவதனை போல ஃபோர்க் கெய்ட்டர் கொண்ட டெலிஸ்கோபிக் போர்க் பெற்று அலாய் வீல் ஸ்பிலிட்-ஸ்போக் வடிவமைப்பைப் கொண்டதாகவும் வட்ட வடிவ ஹெட்லைட் , டிஸ்க் பிரேக்குடன் ஒற்றை இருக்க அமைப்பினை பெறுகிறது.
என்ஜின் க்ராஷ் கார்டு, ஒருங்கிணைக்கப்பட்ட ஃபுட்ரெஸ்ட்டைக் கொண்ட சேரி கார்டு மற்றும் பின்புற டயர் ஹக்கர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புற லக்கேஜ் ரேக் உள்ளது.
பஜாஜ் வரிசையில் உள்ள 125சிசி என்ஜின் ஆனது சிஎன்ஜி எரிபொருள் பயன்படுத்தும் வகையில் புரூஸர் 125 ஆனது விற்பனைக்கு அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம்.