பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனையில் உள்ள பல்சர் N160 மற்றும் பல்சர் 150 இடையே நிலை நிறுத்தப்பட்டுள்ள பல்சர் P150 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.17 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பீளிட் இருக்கை என இரு விதமான ஆப்ஷனுடன் டிஸ்க் பிரேக் பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது.

பஜாஜ் பல்சர் P150

பல்சர் பி150 பைக்கில் ஏர்-கூல்டு, 149சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டு 8,500ஆர்பிஎம்-ல் 14.5 எச்பி பவர் மற்றும் 6,000ஆர்பிஎம்-ல் 13.5Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் கிக்-ஸ்டார்ட்டர் சேர்க்கப்பட்டு எரிபொருள் டேங்க் கொள்ளளவு 14 லிட்டர்,  140 கிலோ எடை கொண்டது. இருக்கை உயரம் 790 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மிமீ ஆகும்.

31மிமீ டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு, பிரேக்கிங் அமைப்பில் 260 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் மூலம் கையாளப்படுகின்றன (இது ஒற்றை டிஸ்க் மாறுபாட்டில் 130 மிமீ டிரம் உள்ளது) ஒற்றை சேனல் ஏபிஎஸ் மூலம் இயக்கப்படுகின்றது.

சிங்கிள் டிஸ்க் மாடலில் 80/100-17 மற்றும் 100/90-17 அளவுள்ள டயர்களில் முறையே முன் மற்றும் பின்பகுதியில் இயங்குகிறது. ட்வின் டிஸ்க் வேரியண்டில் 90/90-17 மற்றும் 110/90-17 டயர்கள், முன் மற்றும் பின்புறம் முறையே பொருத்தப்பட்டுள்ளது.

பல்சர் பி150 பைக்கில் முழு எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட் வழங்கப்படுகிறது, எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் ஆகியவை உள்ளன. மற்றொரு பயனுள்ள அம்சம் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் இருக்கின்றது.

பல்சர் P150 பைக்கின் சிங்கிள் டிஸ்க் வேரியண்ட் ரூ. 1,16,755 , டூயல் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ.1,19,757 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.