ஐபிஎஸ் எனப்படும் சிபிஎஸ் பாதுகாப்பு அம்சத்தை பெற்ற புதிய ஹீரோ HF டீலக்ஸ் பைக் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2019 முதல் சிபிஎஸ் பிரேக் கட்டாயமாகும்.

செல்ஃப் ஸ்டார்ட் டிரம் பிரேக் அலாய் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் டிரம் பிரேக் அலாய் என மொத்தம் இரு விதமான வேரியன்டில் கிடைக்கின்ற HF டீலக்ஸ்  முந்தைய மாடலை விட ரூ.2,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ HF டீலக்ஸ்

வரும் ஏப்ரல் 1, 2019 முதல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து இரு சக்கர வாகனங்களில் அடிப்படை பாதுகாப்பு வசதியை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 125சிசி அல்லது மேற்பட்ட சிசி மாடல்களில் மற்றும் 125சிசி திறனுக்கு கீழுள்ள மாடல்களில் சிபிஎஸ் பிரேக்  இணைக்கப்பட உள்ளது.

ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில் மிக சிறப்பான மைலேஜ் மற்றும் நீடித்த என்ஜின் ஆயுள் வழங்குகின்ற 97.2 சிசி  ஏர்-கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.2 bhp பவர் மற்றும்  8.05 NM டார்கை வழங்குகின்றது. இந்த பைக்கில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மிக சிறப்பான வகையில் மைலேஜ் சேமிக்கும் நுட்பமான ஹீரோவின் i3S அம்சத்தை பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட தோற்ற அமைப்பில் மாறுதல்கள் சேர்க்கப்படாமல் கிராபிக்ஸ் ஸ்டிக்கரில் சிறிய அளவிலான மாற்றங்ளுடன் பின்புற டிரம் பிரேக் 130 மிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கூடுதல் பாதுகாப்பாக இன்ட்கிரேட்டடூ பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிகம் விற்பனை ஆகின்ற இரு சக்கர வாகனங்களில் மூன்றாவது இடத்தை பபெற்று விளங்கும் ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில் கூடுதல் பாதுகாப்பு அம்சம் இணைக்கப்பட்டுள்ளதால், பைக் ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் கூடுதலான மைலேஜ் வழங்குகின்றது.

ஹீரோ HF டீலக்ஸ் பைக் விலை

Hero HF Deluxe SELF START DRUM BRAKE ALLOY WHEEL – i3s ரூ. 49,800

Hero HF Deluxe SELF START DRUM BRAKE ALLOY WHEEL – i3S – ALL BLACK  ரூ. 49,496