பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற புதிய பல்சரின் படங்கள் வெளியாகியுள்ளது.

பஜாஜ் பல்சர் 250

புனே அருகில் உற்பத்தி நிலையை எட்டிய மாடலாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் பஜாஜின் பல்சர் மாடல் அனேகமாக 250சிசி இன்ஜினை பெற்றதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது 220சிசி வரை பல்சர் பிராண்டில் பைக்குகள் கிடைத்து வரும் நிலையில், புதிய மாடல் என்எஸ் 200 போல அமைந்திருந்தாலும் இந்த பைக்கின் இன்ஜின் 250சிசி ஆக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்எஸ் 200 மாடலில் இருந்த தோற்ற அமைப்பு மற்றும் டிசைன் மேம்பாடுகளை கொண்டிருக்கின்றது. குறிப்பாக பைக்கின் பக்கவாட்டு அமைப்பின் நீளம் சற்று கூடுதலாகவும் டெயில் பகுதி, இருக்கை அமைப்பில் ஸ்போர்ட்டிவ் தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர் எல்இடி விளக்குகளாக அமைந்திருப்பதுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றிருக்கும்.

புத்தம் புதிதாக உருவாக்கப்பட்ட 250சிசி இன்ஜின் பெற உள்ள பல்சர் மாடலின் பவர் டொமினார் 250 (27hp/23.5Nm) பைக்கினை விட கூடுதலாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கலாம். என்எஸ் 200 மற்றும் ஆர்எஸ் 200 போல விலை குறைப்பிற்கு பல்சர் 250 பைக்கில் ஆயில் கூல்டு இன்ஜின் ஆப்ஷனாக இருக்கலாம்.

வரும் செப்டம்பர் மாத மத்தியில் புதிய பஜாஜ் பல்சர் 250 விற்பனைக்கு ரூ.1.30 லட்சத்திற்குள் வெளியிடப்படலாம்.

image source