இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான வாகன விற்பனை அதிகரித்து வரும் சூழ்நிலையில் 170 கிமீ முதல் 200 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் பெற்ற ஓகினவா பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் ரூ.59,989 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஓகினவா பிரெயஸ்

இந்தியாவின் மிக வேகமான மின்சாரா ஸ்கூட்டராக வெளிவந்துள்ள பிரெயஸ் மணிக்கு 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றுள்ள ஓகினவா பிரெயஸ் மின்சார ஸ்கூட்டருக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் ரூ.2000 செலுத்தப்பட்ட முன்பதிவு நடைபெற்று வரும் சூழ்நிலையில் விரைவில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

பிரெயஸ் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள 1000 வாட்ஸ் மின் மோட்டார் இயக்க 72V, 45Ah லித்தியம் ஐயன் பேட்டரி மிக வேகமாக சார்ஜில் ஏறும் நுட்பத்துடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக வேகமான சார்ஜ் முறையை பெற்றிருப்பதுடன் இந்த முறையில் 80 சதவீத சார்ஜ் ஏறுவதற்கு 45 நிமிடங்களும், முழுமையான சார்ஜ் ஏறுவதற்கு 6 முதல் 8 மணி நேரம் வரை தேவைப்படுகின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்திலும், 170 கிமீ முதல் 200 கிமீ வரை முழுமையான சிங்கிள் சார்ஜில் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ ( அதிகபட்ச வேகம் மணிக்கு 35kph),  ஸ்போர்ட்டி ( அதிகபட்ச வேகம் மணிக்கு 65kph) மற்றும் டர்போ ( அதிகபட்ச வேகம் மணிக்கு 75kph)  என மொத்தம் மூன்று மோட்களை பெற்றுள்ளது.

774 மிமீ இருக்கை உயரத்துடன், 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வந்துள்ள பிரெயஸ் ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பருடன் 12 அங்குல அலாய் வீல் ஆகியவற்றுடன் டிஸ்க் பிரேக் வசதியுடன் எலக்ட்ரானிக் பிரேக் அசிஸ்ட்  பெற்றுள்ளது.

ஒகினவா பிரெயஸ் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள்,  சைட் ஸ்டேன்ட் இன்டிகேட்டர், திருட்டை தடுக்கும் சென்சார், கீலெஸ் ஸ்டார்ட், மொபைல் சார்ஜிங் போர்ட் உட்பட ஃபைன்ட் மை ஸ்கூட்டர் ஆகிய அம்சங்களை பெற்றுள்ளது.

இந்தியாவின் மிக வேகமான மற்றும் அதிக தொலைவு பயணிக்கும் திறன் பெற்ற ஸ்கூட்டராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஓகினவா பிரெயஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.59,889 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.