இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் தலைவர் ஜூலை மாதம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியிட உள்ளதாக டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்பொழுது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 வரிசையில் S1 Air, S1, S1 Pro என மூன்று விதமாக விற்பனை செய்து வரும் நிலையில் ஜூலை முதல் எஸ்1 ஏர் டெலிவரி வழங்க உள்ளதாக முன்பே அறிவித்துள்ளது.
New ola escooter
end ICE age என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் ஜூலை மாதம் புதிய மாடலை வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் புதிய ஸ்கூட்டரின் நுட்பவிபரங்கள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.
ஏற்கனேவே இந்நிறுவனம், FAME II மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து 2Kwh kற்றும் 4kWh வேரியண்டை எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 மாடல்களிலு நீக்கியிருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய மாடலை வெளியிட்ட தயாராகியுள்ளது.
புதிய மாடல் விலை குறைவானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது விற்பனையில் உள்ள ஓலா எஸ்1 ஏர் மாடல் ஸ்கூட்டர் 3kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. பொதுவாக, 4.5Kw பவரை வெளிப்படுத்துகின்ற ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 85KM/hr ஆகும். 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.
Ola S1 Air 3Kwh – ₹ 1,09,999
Ola S1 3Kwh – ₹ 1,29,999
Ola S1 Pro 4Kwh – ₹ 1,39,999
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)