ரிவோல்ட் ஸ்மார்ட் பைக்

இன்று., இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரிவோல்ட் மின்சார பைக் மாடலில் செயற்கை முறையில் வெளியேற்ற ஒலியை எழுப்பும் வகையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. எலெக்ட்ரிக் பைக்கில் பொதுவாக எவ்விதமான ஒலியும் எழும்பாது. எனினும், செயற்கையான முறை வாயிலாக பல்வேறு மாறுபட்ட ஒலியை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா தொடங்கியுள்ள ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் மிகவும் சவாலான பல்வேறு வசதிகளை கொண்டதாக ஸ்டைலிஷான் அம்சத்துடன் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினை பெற்றதாக அமைந்திருக்கும்.

ரிவோல்ட் மின்சார பைக்

இந்தியாவில் பரவலாக மின்சார இரு சக்கர வாகன விற்பனை அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலும் ஸ்கூட்டர் முறையில் மின்சார இரு சக்கர வாகனங்கள் கிடைத்து வந்த நிலையில், டார்க் டி6எக்ஸ் மாடலை தொடர்ந்து ரிவோல்ட் நிறுவனமும் மின்சாரத்தில் இயங்கும் பைக் மாடலை வெளியிட உள்ளது.

சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) தரச்சான்றிதழ் வழங்கப்படுள்ளது. மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆக இருக்கும்.

10.2 டிகிரி கோணத்தில் உள்ள சரிவிலும் மிக இலகுவாக பயணிக்கும் திறனுடன் வரவுள்ள இந்த பைக்கில், பைக்கின் செயல்திறன், பேட்டரி லைஃப் சுழற்சி , அதிர்ச்சியை தாங்கும் திறன், அனைத்து காலநிலை சார்ந்த சோதனை மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கும் அம்சம் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்டிருந்த டீசரில், பொதுவாக எலெக்ட்ரிக் வாகனங்கள் எவ்விதமான ஒலியும் எழுப்பாது. ஆனால் இந்த மாடலில் செயற்கை முறையான வகையில் ஒலியை எக்ஸ்ஹாஸ்ட் எழுப்பும், மேலும் நமது விருப்பதுக்கு ஏற்ப ஒலியை மாற்றிக்கொள்ளும் வகையில் ஒரு அப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவில் தனது முதல் AI பைக்  மாடலை ரிவோல்ட் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.